மேறியதறிந் தன்றல்லது வந்தவாறு நனியறிந்தன்றோ விலனே தாஅய் முயற்பற ழுகளு முல்லையம் புறவிற் சுவைக்கதிர் வரகின் சீறூ ராங்கண் மெல்லிய லரிவையில் வயினிறீஇ யிழிமினென்ற நின்மொழி மருண்டிசினே வான்வழங்கியற்கை வளிபூட்டினையோ மானுருவாக நின் மனம் பூட்டினையோ வுரைமதி வாழியோ வலவ வெனத்தன் வரைமருண் மார்பி னளிப்பனன் முயங்கி மனைக்கொண்டு புக்கன னெடுந்தகை விருந்தோ பெற்றன டிருந்திழை யோளே”1 |
(அகம்-384) |
இதனாற் பாகன் சிறப்புக் கூறியவாறு காண்க. |
“மறத்தற் கரிதாற்பாக பன்னாள் அறத்தொடு வருந்திய வல்கு தொழிற்கொளீஇய பழமழை பொழிந்த புதுநீரவல்வர நாநவில் பல்கிளை கறங்குமாண்வினை மணியொலி கேளாள் வாணுதலதனா லேகுமி னென்ற விளையர் வல்லே யில்புக்கறியுணர்வாகமெல்லென மண்ணாக் கூந்தன் மாசறக் கழீஇச் சில்போது கொண்டு பல்குரலழுத்திய வந்நிலைப்புகுதலின் மெய்வருத்துராஅ யவிழ்பூமுடியள் கவைஇய மடமா வரிவை மகிழ்ந்தயர் நிலையே”2 |
(நற்றிணை-42) |
1. பொருள் : வலவ! நம் வேந்தன் வெற்றி கொண்டு பகைவினை முடித்தானாக நான் தேரில் ஏறியதையறிவேன்; ஆனால் இங்கு எப்படி வந்தேன் என்பதையறியேன். சீறூரில் மெல்லியல் அரிவையின் மனைக் கண் தேரை நிறுத்தி இறங்குமின் என்று நீ கூறியதைக் கேட்டு மருண்டேன். நீ காற்றைக் குதிரையாகப் பூட்டினாயா?அல்லது நின் மனத்தைப் பூட்டினாயா என்று தலைவன் தன் வலவனைத் தழுவிக் கொண்டு மனைபுக உடனே திருந்திழையாகிய தலைவி அவர்களை விருந்தெதிர் கொண்டனள். |
2. பொருள்: பக்கம் 39ல் காண்க. |