இது தானுற்ற இன்பத்தினைப் பாகற்குக் கூறியது. |
“ஊர்கபாக வொருவினை கழிய” |
(அகம்-44) |
“செல்கதேரே நல்வலம் பெறுந” |
(அகம்-34. 374) |
எனவும் வரும். |
“தயங்கிய களிற்றின் மேற்றகை காணவிடுவதோ தான்வளம் படவென்ற தகைநன்மா மேல்கொண்டு” |
(கலி-31) |
என வருவன தலைவி கூற்றாதலின் தலைவன் மீண்டு வருங்காற் பாகற்கே கூறுவனென்றார். |
காமக்கிழத்தி மனையோள் என்று இவர் ஏமுறு கிளவி சொல்லிய எதிரும்; காமக் கிழத்தி மனையோளென்றிவர் சொல்லிய ஏமுறு கிளவி எதிரும்-இற்பரத்தை தலைவியென்று கூறிய இருவர் சொல்லிய வருத்தமுற்ற கிளவியின் எதிரிடத்தும் கூற்று நிகழ்த்தும். |
அவை ‘அருஞ் சுரத்து வருத்தம் உற்றீரே’ எனவும் ‘எம்மை மறந்தீரே’ எனவுங் கூறுவனவும் பிறவுமாம். |
“எரிகவர்ந்துண்ட வென்றூழ்நீளிடை யரியவாயினு மெளியவன்றே யவவுறு நெஞ்சங் கவவுநனி விரும்பிக் கடுமாண்றிண்டேர் கடைஇ நெடுமா னோக்கிநின் னுள்ளியாம் வரவே.”1 |
(ஐங்-360) |
இது வருத்தம் உற்றிரே என்றதற்குக் கூறியது. |
“தொடங்குவினை தவிரா வசைவி னோன்றாட் கிடந்துயிர் மறுகுவதாயினுமிடம்படின் வீழ்களிறு மிசையாப் புலியினுஞ் சிறந்த தாவிலுள்ளந் தலைத் தலைச் சிறப்பச் செய்வினைக் ககன்ற காலை யெஃகுற் றிருவேறாகிய தெரிதகுவனப்பின் மாவினறுவடிபோலக் காண்டொறு மேவறண்டா மகிழ் நோக்குண்க ணினையாது கழிந்த வைக லெனையதூஉம் வாழலென் யானெனத் தேற்றிப் பன்மாண் |
1. பொருள்: பக்கம் 40ல் காண்க. |