டாழக் கூறிய தகைசானன்மொழி மறந்தனிர்போறி ரெம்மெனச்சிறந்தநின் னெயிறுகெழு துவர்வாயின்னகையழுங்க வினவலானாப் புனையிழைகேளினி வெம்மை தண்டா வெரியுகு பறந்தலைக் கொம்மை வாடிய வியவுள்யானை நீர்மருங் களியாது தேர்மருங் கோடி யறுநீரம்பியி னெறிமுத லுணங்கு முள்ளுநர்ப்பனிக்கு மூக்கருங்கடத்திடை யெள்ளனோனாப் பொருடரல் விருப்பொரு நாணுத்தளையாகவைகி மாண்வினைக் குடம்பாண்டொழிந்தமையல்லதை மடங்கெழு நெஞ்ச நின்னுழையதுவே”1 |
(அகம்-29) |
இது மறந்தீர்போலும் என்றதற்கும் கூறியது. |
“உள்ளினொனல்லெனோ யானேயுள்ளி நினைந்தனெனல்லனோ பெரிதே நினைந்து மருண்டென னல்லனோ வுலகத்துப்பண்பே நீடியமராஅத்த தோடுதோய்மலிநிறை யிறைத்துணச் சென்றற்றாஅங் கனைப்பெருங்காம மீண்டுகடைக் கொளவே”2 |
(குறுந்-99) |
‘பிறவும்’ என்றதனான் இத்தன்மையனவுங் கொள்க. இவை இருவர்க்கும் பொது. இவற்றைக் காமக்கிழத்தி விரைந்து கூறுமென்றற்கு அவளை முற்கூறினார். |
1. பொருள் : மாவடுப் பிளவுபோலும் நின் கண்களை நினையாது கழியும் நாள்கள் யான் வாழா நாளாகும் என எம்முடன் இருந்தபோது கூறிய சொற்களை, தான் அடித்தயானை இடப்பக்கம் வீழப் பசிவருத்தினும் அதனை உண்ணாமல் வேறு யானையை யடிக்கச் செல்லும் புலிபோலும் ஊக்கமுடன் பொருளீட்ட எம்மைப் பிரிந்து சென்ற காலத்தில் மறந்துவிட்டீர்போலும் என என்னை வினவும் ஆயிழையே கேள்; கொடிய வெப்பம் நீங்காத வழியில் யானையானது நீர்பெறாது பேய்த்தேர் காணும் இடமெல்லாம் ஓடி மயங்கும் படியான நீரற்ற வழிகளையுடைய காட்டிடத்து, பிறர் இகழ்வதைப் பொறாத ஊக்கமொடு பொருளீட்டுதலை விரும்பி உடம்பு அங்கே இருந்ததேயல்லாமல் என் அறிவற்ற நெஞ்சம் நின்னிடத்தேதான் கிடந்தது. |
2. பொருள்: பக்கம் 42ல் காண்க. |