உதாரணம் |
“திருந்துங் காட்சிப் பெரும்பெயர்க் கற்பி னாணுடையரிவை மாணகர் நெடுந்தே ரெய்தவந் தன்றாற் பாக நல்வர விளையரிசைத்தலிற் கிளையோ ரெல்லாஞ் சேயுயர் நெடுங்கடைத் துவன்றினரெதிர்மார் தாயரும் புதல்வருந் தன்முன் பறியாக் கழிபேருவகை வழிவழி சிறப்ப வறம்புரி யொழுக்கங் காண்கம் வருந்தின காண்க நின்றிருந்து நடைமாவே” |
ஏனைவாயில் எதிரொடு தொகைஇ-சிறந்த மொழியை ஒழிந்து நின்ற வாயில்கட்கு எதிரே கூறுங் கூற்றோடே முற்கூறியவற்றைத் தொகுத்து ; |
உதாரணம் |
“நகுகம் வாராய் பாண பகுவா யரிபெய் கிண்கிணி யார்ப்பத்தெருவிற் றேர்நடைபயிற்றுந் தேமொழிப்புதல்வன் பூநாறு செவ்வாய் சிதைத்த சாந்தமொடு காமர் நெஞ்சந் துரப்ப யாந்தம் முயங்கல் விருப்பொடு குறுகினேமாகப் பிறைவனப்புற்ற மாசிறிருநுத னாறிருங் கதுப்பி னெங்காதலி வேறுணர்ந்து வெரூஉமான்பிணையினொ ரீஇ யாரையோவென் றிகந்து நின்றதுவே”1 |
(நற்றிணை-250) |
இஃது, ஏனைவாயிலாகிய பாணற்கு உரைத்தது. |
பண்ணமை பகுதி முப்பதினொரு மூன்றும்-ஓதப்பட்ட இவையே இடமாக நல்லறிவுடையோர் ஆண்டாண்டு வேறு வேறாகச் செய்யுள் செய்து கோடற்கு அமைந்து நின்ற கூறுபாட்டை உடையவாகிய முப்பத்து மூன்று துறையும். |
எண்ணருஞ் சிறப்பிற் கிழவோன்மேன-களவுபோல இழி தொழிலன்றி ஆராய்தற்கரிய சிறப்போடு கூடிய தலைவன் கண்ண என்றவாறு. |
1. பொருள் : பக்கம் 26 ல் காண்க. |