76 | தொல்காப்பியம் - உரைவளம் | |
தலைவி கூற்று | 145. | அவனறி வாற்ற அறியும் ஆகலின் ஏற்றற் கண்ணும் நிறுத்தற் கண்ணும் உரிமை கொடுத்த கிழவோன் பாங்கின் பெருமையிற் றிரியா வனப்பின் கண்ணும் கிழவனை மகடூஉப் புலம்புபெரி தாகலின் அலமரல் பெருகிய காமத்து மிகுதியும் இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்தும் கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறீஇ நளியின் நீக்கிய விளிவரு நிலையும் புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு அகன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி இயன்ற நெஞ்சந் தலைப்பெயர்த் தருக்கி எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும் தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி எங்கையர்க் குரையென இரத்தற் கண்ணும் செல்லாக் காலைச் செல்கென விடுத்தலும் காமக்கிழத்தி தன்மகத் தழீஇ ஏமுறு விளையாட் டிறுதிக் கண்ணும் சிறந்த செய்கை அவ்வழித் தோன்றி அறம்புரி நெஞ்சமொடு1 தன்வர வறியாமைப் புறஞ்செய்து பெயர்த்தல் வேண்டிடத் தானும் தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனால் அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கினும்2 கொடியோர் கொடுமை சுடுமென ஒடியாது நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப் பகுதியின் நீங்கிய தகுதிக் கண்ணும் கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக் காதல் எங்கையர் காணின் நன்றென மாதர் சான்ற வகையின் கண்ணும் தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை மாயப் பரத்தை யுள்ளிய வழியும் தன்வயிற் சிறப்பினும் அவன்வயிற் பிரிப்பினும் | |
| பாடம். 1. உள்ளமொடு | 2. நெருங்கலும் |
|
|