பக்கம் எண் :

கற்பியல் சூ.575
 

“இம்மைப் பிறப்பிற் பிரியலமென்றேனாக்
கண்ணிறை நீர் கொண்டனள்”
1
  

(குறள்-1315)
   

“தன்னை யுணர்த்தினுங்காயும் பிறர்க்குநீ
ரிந்நீரராகுதிரென்று”2

(குறள்-1319)

“எரிகவர்ந்துண்ட வென்றூழ் நீளிடைச்
சிறிது கண்படிப்பினுங் காண்குவென்மன்ற
நள்ளென்குங்குனளிமனை நெடுநகர்
வேங்கை வென்ற சுணங்கிற்
றேம்பாய் கூந்தன் மாஅயோளே”
3

(ஐங்குறு-324)
   

எனவும் வரும். இன்னும் அதனானே ஊடலைவிரும்பிக் கூறுவனவுங் கொள்க.
  

“ஊடலினுண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவதன்றுகொலென்று”
4
  

(குறள்-1307)
  

“ஊடுகமன்னோவொளியிழையாமிரப்ப
நீடுக மன்னோவிரா”
5
  

(குறள்-1329)
  

எனவரும்.  இன்னுங்  கற்பியற்கண்  தலைவன்  கூற்றாய்  வேறுபட வரும் சான்றோர் செய்யுட்களெல்லாம்
இதனான் அமைத்துக்கொள்க.
 


1. பொருள் : இப்பிறவியில்  நாம்  பிரியேம்  என்றேன்;  அவ்வளவில்  தன் கண்ணில்  
நிறைந்த  நீர் கொண்டு அழுதாள்.
  

2. பொருள் : தன்னை யான் ஊடலுணர்த்தினாலும் அவள் இப்படித்தானே  பிறரிடத்தும் 
(பிறமகளிரிடத்தும்) ஊடல் உணர்த்துவீர் என்று சொல்லி மேலும் புலப்பாளாவாள்.
  

3. பொருள் :  நெருப்புக்  கவர்ந்து பற்றிய  ஞாயிற்றின் வெப்பம்  மிக்க சுரத்திடையே 
நடுஇரவில் யான் சிறிது  பொழுது  கண்  அயரினும்  சுணங்கும்  கூந்தலும்  உடைய 
மாயோளைக் காண்பேன். அதனால் அவளை யான் மறக்குமாறில்லை.
  

4. பொருள்  :கூடியிருப்பதால்  வரும்   இன்பம்   இவ்வூடலால்   நீட்டித்துவருவது 
அன்றுபோலும்  என எண்ணுவதால் ஊடலாலும் ஓர் துன்பம் உண்டு.
  

5. பொருள்  : ஒள்ளிய  இழையணிந்த தலைவி இன்னும் ஊடுவாளாக; அவ்வூடலைத் 
தீர்க்கும் பொருட்டு யாம் அவளை இரக்க வேண்டி இராப்பொழுதும் நீட்டிப்பதாக,