உரிமை கொடுத்த கிழவோன் பாங்கின் பெருமையில் திரியா அன்பின் கண்ணும் என்பது-தலைவிக்கு உரிமையைக் கொடுத்த கிழவோன் மாட்டுப் பெருமையிற்றிரியா அன்பின் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. |
உதாரணம் |
“நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே சாரற் கருங்கோற் குறிஞ்சிப்பூக் கொண்டு பெருந்தேனிழைக்கும் நாடனொடு நட்பே”1 |
(குறுந்-3) |
எனவரும். |
கிழவன் மகடூஉப் புலம்பு பெரிதாகலின் அலமரல் பெருகிய காமத்து மிகுதியும் என்பது-தலைவனைத் தலைவி நீங்கித் தனிமையுறுதல் பெரிதாகலின் ஆண்டு அலமரல் பெருகிய காமத்தின் மிகுதியின் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. |
உதாரணம் |
“நீர் நீடாடிற் கண்ணும் சிவக்கும் ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும் தணந்தனிராயின்எம் இல்லுய்த்துக் கொடுமோ அந்தண் பொய்கை எந்தை எம்மூர்க் கடும்பாம்பு வழங்குந் தெருவில் நடுங்கஞர் எவ்வங் களைந்த எம்மே”2 |
(குறுந்-354) |
எனவும், |
“என்கைக் கொண்டு தன்கண் ஒற்றியுந் தன்கைக் கொண்டென் நன்னுதல் நீவியும் |
|
1. பொருள் : குறிஞ்சிப் பூக்களைக் கொண்டு பெருந்தேன் கூடுகட்டும் நாடனொடு கொண்ட நட்பானது நிலத்தினும் பெரியது. வானினும் உயர்ந்தது. கடல்நீரினும் அளவில்லாதது. |
2. பொருள் : பண்டு எம்மூரிற் பாம்பு உலவும் தெருவில் நடுங்கு துயர்களைந்து சென்றாய். நீண்ட நேரம் நீராடிற் கண் சிவக்கும். உண்டோர் வாயில் மிகுதியாயின் தேனும் புளிக்கும் அவ்வாறு நெடுநாள் இவளுடன் மகிழ்ந்த நீவிர் இப்போது பிரிய நினைத்தீராயின் எம் வீட்டில் விடுத்துச் செல்வீராக. |