பக்கம் எண் :

80தொல்காப்பியம் - உரைவளம்
 

அன்னைபோல இனிய கூறியும்
கள்வர்போலக் கொடியன்மாதோ
மணியென இழிதரும் அருவிப் பொன்னென
வேங்கைதாய ஓங்குமலை அடுக்கத்து
ஆடுகழை நிவந்த பைங்கண்மூங்கில்
ஓடுமழை கிழிக்குஞ் சென்னிக்
கோடுயர் பிறங்கல் மலைகிழவோனே.”
1
  

(நற்றிணை-28)
  

எனவும்,
  

“மனைநடுவயலை வேழம் சுற்றும்
துறைகேழ் ஊரன் கொடுமைநாணி
நல்லன் என்றும்யாமே
அல்லனென்னும்என் தடமென்தோளே”
2
  

(ஐங்குறு-11)
  

எனவும்,
  

“வீழுநர் வீழப்படுவார்க் கமையுமே
வாழுநம் என்னுஞ் செருக்கு”
3
  

(குறள்-1192)
 

எனவும் வரும்.
  

இன்பமும்  இடும்பையும்  ஆகிய  இடத்தும் என்பது-தலைவிக்கு இன்பமும் துன்பமும் ஒருங்கு நிகழும்
வழியும் கூற்று நிகழும் என்றவாறு.
  


1. பொருள் :  மலைகிழவோன்  முன்னெல்லாம்  என்கைக்கொண்டு  தன்  கண்ணில்  ஒற்றியும்  
தன் கைக்கொண்டு  என் கூந்தல்  நீவியும்  அன்னைபோல  இனிய  சொல்லியும்  இருந்தான். இன்றோ கள்வர்போலக் கொடியன் ஆயினான்.
  

2. பொருள் : மனையில்   நட்ட  வயலைக்கொடி  கொறுக்கந்  தட்டையைச்  சுற்றிப்  படரும் 
துறைபொருந்திய ஊரனை அவன் நமக்குச் செய்த கொடுமைக்கு நாணி அவன் நல்லவன் என்று 
யாம் கூறுவாம். ஆனால் எம்தோள் அவன் பிரிவால் மெலிந்து காட்டி அவன் நல்லன் அல்லன் 
என்று கூறும்.
  

3. பொருள்  : தம்மால்  விரும்பப்பட்ட  தலைவரால்  விரும்பப்படும்  மகளிர்க்குத்  தலைவன்  
பிரிந்த  காலத்தும் விரைந்து  வருவார் என்னும் நினைவால் நன்கு வாழ்வேம் என்னும் தருக்கு 
அமையும்.