பி.இ.நூ. |
நம்பி அகப் பொருள் 57 |
களவின் வழிவந்த கற்பின் புணர்ச்சி கிளைஞரின் எய்தாக் கேண்மையும் உடைத்தே உடன்போய் வரைதலும் உண்மை யான |
இலக்கண விளக்கம் 425 |
நம்பியகப்பொருட் சூத்திரமே. |
மா. அக. |
கொண்டுதலைக் கழிந்துழிக் கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டெனக் கழறினர் புலவர். |
இளம் |
இது மேலதற்கோர் புறனடை. |
(இ-ள்) கொடுப்போரின்றியும் கரண நிகழ்ச்சி உண்டு, புணர்ந்துடன் போகிய காலத்து என்றவாறு. |
எனவே கற்பிற்குக் கரண நிகழ்ச்சி ஒருதலையாயிற்று. இதனானே கொடுப்போரில்வழியும் கரண நிகழ்ச்சி உண்மையும் ஒழுக்கக் குறைபாடுஇன்மையும்1 கொள்க. |
“பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு தொல் மூதாலத்துப் பொதியில் தோன்றிய நாலூர்க் கோசர் நன்மொழி போல வாயா கின்றே தோழியாய் கழற் சேயிலை வெள்வேல் விடலையொடு தொகுவளை முன்கை மடந்தை நட்பே”2 |
(குறுந்-15) |
1. உடன்போக்கும் உடன் போய பின்னர் சென்றவிடத்துத் தாமே கரண நிகழ்ச்சி கொண்டு மணப்பதும் ஆகியவை ஒழுக்கக் குறைபாடுடையன அல்ல என்பது கருத்து. 2. பொருள்: தோழீ! ஆலமரத்துக்கீழ்ப் பொதுமன்றத்தில் வந்து தங்கிய நாலூர்க்கோசர் சொல் தவறாதவர்கள். அவர்கள் சொல் என்றும் நல்லதாக அமையும். அந்நாலூர்க் கோசர் நன்மொழி உண்மையாவது போல வெள்வேல் விடலையொடு நம் மடந்தை பறையொலிக்கச் சங்கு முழங்கக் கொண்ட நட்பு உண்மையாகியது. |