பக்கம் எண் :

82தொல்காப்பியம் - உரைவளம்
 

புகன்ற   உள்ளமொடு   புதுவோர்  சாயற்கு  அகன்றகிழவனைப்  புலம்புநனி  காட்டி  இயன்ற
நெஞ்சந்தலைப் பெயர்த்தருக்கி  எதிர்பெய்து  மறுத்த ஈரத்து  மருங்கினும்  என்பது-விருப்பமுடைய
உள்ளத்தோடே புதுவோரது நலத்தின் பொருட்டு அகன்ற கிழவனைத் தனது தனிமை மிகவும் காட்டி
அவன் மாட்டுச் செல்கின்ற நெஞ்சத்தை மீட்டு அருகப்பண்ணி அவன் காதலித்தாளை எதிர்ப்பெய்து
கொண்டு புணர்ச்சியை மறுத்த ஈரத்தின் கண்ணும் கூற்று நிகழும்.
  

ஈரமாவது முற்றும் மறாமை.
  

*“கடல்கண் டன்ன கண்ணகன் பரப்பின்
நிலம்பக வீழ்ந்த வேர்முதிர் கிழங்கின்
கழைகண் டன்ன தூம்புடைத்திரள்கால்
களிற்றுச் செவியன்ன பாசடைமருங்கில்
கழுநிவந் தன்ன கொழுமுகை இடைஇடை
முறுவல் முகத்திற் பன்மலர் தயங்கப்
பூத்த தாமரைப் புள்ளிமிழ்பழனத்து
வேப்புநனை அன்ன நெடுங்கண் நீர்ஞெண்டு
இரைதேர் வெண்குருகு அஞ்சி அயலது
ஒலித்த பகன்றை இருஞ்சேற்றள்ளல்
திதலையின் வரிப்ப ஓடி விரைந்து தன்
ஈர்மலி மண்ணளைச் செறியும் ஊர
மனைநகு வயலை மரனிவர் கொழுங்கொடி
அரிமலர் ஆம்பலோடார் தழைததைஇ
விழவாடு மகளிரொடு தழுவணிப்பொலிந்து
மலரேர் உண்கண் மாணிழை முன்கைக்
குறுந்தொடி துடக்கிய நெடுந்தொடர் விடுத்தது
உடன்றனள் போலுநின் காதலி எம்போல்
புல்உளைக் குடுமிப் புதல்வற் பயந்து
நெல்லுடை நெடுநகர் நின்னின்றுறைய
என்ன கடத்தளோ மற்ற தன்முகத்து
  


* பொருள் : தாமரை  பூத்துள்ள புட்கள் ஒலிக்கும் வயலில் நீர் நண்டானது வெளியில் சென்று
ஆங்கு  இரை  தேர்ந்து  வந்த  வெண்ணிற நாரையைக் கண்டு அஞ்சி மீளவும் தன் சேற்று 
வளையில்  வந்து  தங்கும்படியான ஊரனே!  நின்  காதலியாகிய பரத்தையானவள் வயலைக் கொடியால்   ஆம்பலோடு  கட்டிய  தழையுடையுடுத்து  விழாக்   கொள்ளும்   மகளிரொடு தழுவியாடுதலாற் பொலிவு பெற்று மையுண்ட கண்களோடு  விளங்கு  பவளாகிய அவள் தன் தொடியணிந்த கைகளால்