பக்கம் எண் :

84தொல்காப்பியம் - உரைவளம்
 

எனக் கூறுதலால் தான் தாழ்ந்தவாறும், எங்கையர்க்கு உரை இற்றெனக் கூறியவாறும் காண்க.
  

“நினக்கே அன்றஃதெமக்குமார் இனிதே
நின்மார்பு நயந்த நன்னுதல் அரிவை
வேண்டிய குறிப்பினை ஆகி
ஈண்டு நீ யருளாது ஆண்டுறைதல்லே”
1
  

(ஐங்குறு-46)
  

இதுவும் அது.
  

செல்லாக் காலைச் செல்கென விடுத்தலும் என்பது2- தலைவன் போகாத  காலத்துப்  போவெனக்
கூறுதலும் என்றவாறு.
  

உதாரணம்
  

“பூங்கண் புதல்வனைப் பொய்பல பாராட்டி
நீங்காய் இகவாய் நெடுங்கடை நில்லாதி
ஆங்கே அவர்வயிற்சென்றீ அணிசிதைப்பான்
ஈங்கெம் புதல்வனைத் தந்து”
3
  

(கலித்-79)
  

எனவரும்.  


தெளிவிக்க   வருவாயாக.  அதனாற்  பயன்  என்-இது தலைவி கூற்று...யாற்றுநீரால் நிறையாத 
கடல்போல நாளும் புணர்ந்தும் பரத்தைமை குறையாத நின்னொடு புலந்து நிற்கும் பெண்டிரைத் தெளிவிப்பாயாக. நின்  பொய்க்கூற்றை  மெய்யாகக் கொள்ளுதலால் நினைக்குயாம் தோற்பேம். 
யாம் தோற்கும்படியாக நின் தெளிவிப்பு அமையின் பயன்என்.
  

1. பொருள்  :  பெரும!  நின்மார்பை  விரும்பிய   நன்னுதல்   அரிவை  (பரத்தை)  விரும்பிச்  
செய்யும்   குறிப்பினையுடையையாய்   இங்கு  (தலைவியிடம்)  வாராது அங்கேயே நீ தங்குதல் 
நினக்கு மட்டுமன்றி எமக்கும் நல்லதே.
  

2. தன்னை விட்டுச் செல்லாதபோது பரத்தையரிடம் செல்க எனப் புலந்துரைத்து விடுதல்.
  

3. பொருள்  : எம்  புதல்வனைப்  பல  பொய் கூறிப் பாராட்டி அவனை நீங்காமல் நிற்கிறாய். 
பரத்தையின் கால எல்லையும் கடத்துகின்றாய். நெடிய இந்த வாயிலில் நில்லாதே. சேரியிலுள்ள
பரத்தையரிடமே செல். இப்  புதல்வனை  அங்கு அழைத்துச் சென்றால் இவன் அப்பரத்தையர்
அழகைச் சிதைப்பான். அதனால் விட்டுச் செல்.