பக்கம் எண் :

கற்பியல் சூ.685
 

காமக்கிழத்தி  தன்மகத்  தழீஇ  ஏமுறு விளையாட்டு  இறுதிக்  கண்ணும்  என்பது-காமக்கிழத்தி 
தலைவி மகவைத் தழீஇ ஏமுற்ற விளையாட்டின் இறுதிக் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.
  

உதாரணம்
  

“நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத்
தாதின் அல்லி அயலிதழ் புரையும்
மாசில் அங்கை மணிமருள் அவ்வாய்
நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல்
யாவரும் விழையும்பொலந்தொடிப் புதல்வனைத்
தேர்வழங்கு தெருவில் தமியோற் கண்டே
கூரெயிற் றரிவை குறுகினள் யாவருங்
காணுநர் இன்மையிற் செத்தனள் பேணிப்
பொலங்கலஞ் சுமந்த பூண்தாங்கு இளமுலை
வருக மாளஎன் உயிரெனப் பெரிதுவந்து
கொண்டனள் நின்றோள் கண்டுநிலைச் செல்லேன்
மாசில் குறுமகளெவன்பே துற்றனை
நீயுந் தாயை இவற்கென யான்தன்
கரைய வந்து விரைவனென் கவைஇக்
களவுடம் படுநரில் கவிழ்ந்து நிலங்கிளையா
நாணி நின்றோள் நிலை கண்டியானும்
பேணினென் அல்லனோ மகிழ்ந வானத்து
அணங்கருங் கடவுள் அன்னோள் நின்
மகன்தாயாதல் புரைவதாங்கெனவே”
1
 

(அகம்-16)
  

எனவரும்.  


1. பொருள் : அங்கையும்  அழகிய  வாயும்  மழலைத்  தீம்சொல்லும், பொன்தொடியும் உடைய 
யாவரும்  கண்டு  விரும்பும்  என்  புதல்வனை  தான்தேர்  உருட்டிச்   செல்லும்  தெருவில் 
தனியனாய் இருப்பக் கண்டுநின் பரத்தையானவள் அக்கம்பக்கம் யாரும் இல்லாமையை நோக்கி
அவனை என்  உயிரே வருக எனத்  தன் மார்போடு அணைத்துக்  கொண்டு  நின்றாள். அது
கண்டயான் ‘நீயும்  அவனுக்குத்  தாய்தான்’ என்று  அவளைத்  தழுவிக்  கூறினேன்.  அவள்
உடன் நாணினாள்; அவள் நிலை கண்டு தலைவனே! நின்மகனுக்கு  அவளும் தாயாவாள் என
அவளை விரும்பியேற்றேன் அல்லனோ?