“அடும்பவிழ் அணிமலர் சிதைஇமீன் அருந்துந் தடந்தாள் நாரை யிருக்கும் எக்கர்த் தண்ணந்துறைவற் றொடுத்து நன்னலங் கொள்வாம் இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டக் கொடுத்தவை தாஎனக் கூறலின் இன்னாதோ நம் மன்னுயிர் இழவே” |
இது பிரித்தல் பற்றி வந்தது. |
“நீரார் செறுவில் நெய்தலொடுநீடிய நேரிதழ் ஆம்பல் நிரையிதழ் கொண்மார் சீரார் சேயிழை ஒலிப்பஓடும் ஓரை மகளிர் ஓதை வெரீஇ யெழுந்து ஆரலார்கை அஞ்சிறைத் தொழுதி உயர்ந்த பொங்கர் உயர்மரம் ஏறி அமர்க்கண் மகளிர் அலப்பிய அந்நோய் தமர்க்குரைப் பனபோற் பல்குரல் பயிற்றும் உயர்ந்த போரின் ஒலி நல்லூரன் புதுவோர்ப் புணர்தல் வெய்யனாயின் வதுவை நாளால் வைகலும் அஃதியான் நோவேன் தோழி நோவாய் நீயென எற்பார்த்துறுவோய் கேளினித் தெற்றென” |
“எல்லினை வருதி எவன் குறித்தனை யெனச் சொல்லா திருப்பேன் ஆயின் ஒல்லென விரிஉளைக் கலிமான் தேரொடு வந்த விருந்தெதிர் கோடலின் மறப்பல் என்றும்” |
“வாடிய பூவொடு வாரல் எம் மனையென ஊடி யிருப்பேனாயின் நீடா அச்சாறாக உணரிய வருபவன் பொய்ச்சூள் அஞ்சிப் புலவேன் ஆகுவல், |
“பகலாண் டல்கினை பரத்த என்றியான் இகலி இருப்பேனாயின் தான்தன் முதல்வன் பெரும்பெயர் முறையுளிப் பெற்ற புதல்வற் புல்லிப் பொய்த்துயில் துஞ்சும்
ஆங்க,
விருந்தெதிர் கொள்ளவும் பொய்ச்சூள் அஞ்சவும் அரும்பெறற் புதல்வனை முயங்கக் காணவும் |