பக்கம் எண் :

கற்பியல் சூ.697
 

ஆம்பல் மெல்லடை கிழியக் குவளைக்
கூம்புவிடு பல்மலர் மாந்திக் கரைய
காஞ்சி நுண்டா தீர்ம்புறத்துறப்ப
மெல்கிடு கவுள அல்குநிலை புகுதரும்
தண்துறை யூரன் தண்டார் அகலம்
வதுவை நாளணிப் புதுவோர்ப் புணரிய
பரிவொடு வரூஉம் பாணன் தெருவில்
புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி அழிபட்
டெம்மனை புகுதந்தோனே அதுகண்டு
மெய்ம்மலி உவகை மறையினென் எதிர்சென்
றிம்மனை யன்றஃதும்மனை என்ற
என்னுந் தன்னும் நோக்கி
மம்மர் நெஞ்சினன் தொழுதுநின் றதுவே.”
1
  

(அகம்-56)
  

இது மேற்கூறிய வாற்றானன்றிப் பிறவாற்றான் வந்தது.
  

“ஒலிபுனல் ஊரனை ஒரு தலையாக
வலிநமக் காவது வலியென்றொழியப்
பந்தர் மாட்டிய பரூஉச்சுடர் விளக்கத்துக்
கந்த முனித்தலைத் தும்பி ஆர்ப்பக்
காலை கொட்டிய தவர்தோற் சிறுபறை
மாலை யாமத்து மதிதர விடாது
பூண்டு கிடந்து வளரும் பூங்கட் புதல்வனைக்
காண்டலுங் காணான்தன் கடிமனை யானே”
2
  


1. பொருள் : தோழீ!   நேற்றைய   நாளில்  எருமைகள்  தெளிந்த  நீர்க்குளம் கலங்க ஆம்பல் 
இலைகள்  கிழியக்  குவளை  மலர்களை  மாந்தி,  தரையில்  உள்ள  காஞ்சி  மலர்த் தாதுகள் 
தம்முதுகின் புறத்தே சிந்த அசைபோடும் வாயினவாகித் தாம் தங்கும் கொட்டிலில் புகும்படியான
ஊரன் மார்பகத்துப்  புதுப்  பரத்தையரைச்  சேர்க்கவந்த  பாணன்,  தெருவில் புனிற்றுப் பசுப் 
பாய்ந்ததாகக்  கலங்கி  யாழைக்  கீழே  போட்டுவிட்டு  எம்மனையிற்  புகுந்தான். அது கண்டு 
உடலில் வந்த மகிழ்ச்சியை
  மறைத்து  அவனைப்  பார்த்து  நீ  தேடிவந்த  மனை  இதுவன்று
அதுவாகும் என்றேன். அவன்  என்னையும்  தன்னையும்  மாறிப் பார்த்து  என்னைத்  தொழுது
நின்றான். அந்நிலை எனக்கு நகையாகியது.
  

2. பொருள் : தோழீ! புனலூரனை உறுதியாக நமக்கு வலியுடையனாவது வன்மையாகும் (அரிதாகும்)
என்று   நாம்  வாளா  விட்டுவிடவும்,  பந்தரில் ஏற்றிய விளக்கு வெளிச்சத்தில் வண்டொலிக்கக் 
காலையில் கொட்டிய