இஃது ஆற்றாமை வாயிலாகச் சென்றாற்குக் கூறியது. |
“புள்ளிமிழகல்வயின்” என்ற மருதக்கலியுள், (79) |
“பூங்கட் புதல்வனைப் பொய்பாராட்டி நீங்காய் இகவாய் நெடுங்கடை நில்லாதி ஆங்கே அவர்வயின் சென்றீ அணிசிதைப்பான் ஈங்கெம் புதல்வனைத் தந்து”1 |
என்று புதல்வன் வாயிலாகக் கூறியது காண்க. |
நச் |
இது, முறையானே தலைவி கூற்று நிகழும் இடங்கூறுகின்றது. |
இதன் பொருள்: அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின் ஏற்றற் கண்ணும் நிறுத்தற் கண்ணும் உரிமை கொடுத்த கிழவோன் பாங்கிற் பெருமையில் திரியா அன்பின் கண்ணும். அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்-வேதத்தையுந் தரும நூலையுந் தலைவன் அறிந்த அறிவைத் தலைவி மிக அறியுமாதலின், ஏற்றற் கண்ணும்-அந்தணர் முதலிய மூவருந்தத்தமக்குரிய வேள்வி செய்யுங்கால் தம் மனைவியர் பலருள்ளுந் தமக்கு ஒத்தாளை வேள்விக்கண் உரிமை வகையான் ஏனை மகளிரின் உயர்த்தல் செய்யுமிடத்தும், நிறுத்தற் கண்ணும்-தத்தங்குலத்திற்கேற்ப நிறுத்துதலைச் செய்யுமிடத்தும், உரிமை கொடுத்த கிழவோன்பாங்கில்-அவர் குலத்திற்கேற்ற உரிமைகளைக் கொடுத்த தலைவனிடத்து, பெருமையில் திரியா அன்பின் கண்ணும்-தத்தங் குலத்திற்கேற்ற பெருமையினின்றும் நீங்காத அன்பு செய்து ஒழுகுதற் கண்ணும், அறியுமாகலின் அன்பு செய்து ஒழுகுமெனக் கூட்டுக*. |
என்றது, அந்தணர்க்கு நால்வரும் அரசர்க்கு மூவரும் வணிகர்க்கு இருவருந் தலைவியராகிய வழித் தங்குலத்திற் கொண்டவரே வேள்விக்கு உரியர் ஏனையோர் வேள்விக்கு உரியரல்ல ரென்பதூஉம் அவர்க்குத் தங்குலங்கட்கு ஏற்ற வகையின் உரிமை கொடுப்ப ரென்பதூஉம் அவர்களும் இது கருமமே செய்தானென்று அன்பில் திரியாரென்பதூஉங் கூறியவாறு. |
உதாரணம் |
“நின்ற சொல்லி னீடுதோறினிய ரென்று மென்றோள் பிரிபறியலரே |
|
1. பொருள் : பக்கம் 84ல் காண்க. |
* இவ்வுரை ஆரியச் சார்பாக வலிந்து எழுதியவுரை. |