பக்கம் எண் :

104தொல்காப்பியம் - உரைவளம்
 

தன்னை அவமதித்தானென்றது ‘இளி வருநிலை’ யென்றார்.
  

“கரும்புநடு பாத்தியிற் கலித்த வாம்பல்
சுரும்புபசி களையும் பெரும்புன லூர
புதல்வனை யீன்றவெம் மேனிமுயங்க
லதுவே தெய்யநின் மார்புசிதைப்பதுவே”
1
  

(ஐங்குறு-65)
  

இது, புதல்வற் பயந்த காலத்துப் பிரிவு பற்றிக் கூறியது.
  

புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு அகன்ற கிழவனை-புதல்வனை விளையாட்டை விரும்பின
உள்ளத்தோடே புதுவது புணர்ந்த பரத்தையர்  தன்மாட்டு  மனநெகிழ்ந்த  மென்மையின் பொருட்டு
அவர்க்கு அருள் செய்யப் பிரிந்து வந்தோனை, புலம்பு நனிகாட்டி-தனது தனிமை மிகவும் அறிவித்து,
இயன்ற நெஞ்சந்தலைப்பெயர்த்து   அருக்கி-அவன்   மேற்   சென்ற   நெஞ்சினைச்  சொல்லாமல்
அவனிடத்தினின்றும் மீட்டு  அருகப்  பண்ணி  எதிர்பெய்து  மறுத்த  ஈரத்து  மருங்கினும்-பிறருள்
ஒருத்தியைக்   காணாளாயினும்    கண்டாள்  போலத்   தன்முன்னர்ப்  பெய்துகொண்டு  வாயின் 
மறுத்ததனால் தோற்றிய நயனுடைமைக் கண்ணும்.
  

எனவே, மறுப்பாள் போல் நயந்தாளாயிற்று. கிழவனை மறுத்தவெனக் கூட்டுக.
  

உதாரணம்
  

“கடல்கண் டன்ன கண்ணகன் பரப்பி
னிலம்பக வீழ்ந்த வேர்முதிர் கிழங்கிற்
கழைகண்டன்ன தூம்புடைத் திரள்காற்
களிற்றுச் செவியன்ன பாசடை மருங்கிற்
கழுநிவந்தன்ன கொழுமுகையிடையிடை
முறுவன் முகத்திற் பன்மலர் தயங்கப்
பூத்த தாமரைப் புள்ளிமிழ் பழனத்து
வேப்புநனை யன்ன நெடுங்கணீர்ஞெண்
டிரைதேர் வெண்குரு கஞ்சியயல
தொலித்த பகன்றை யிருஞ்சேற்றள்ளற்
றிதலையின் வரிப்ப வோடி விரைந்துதன்
னீர்மலி மண்ணளைச் செறியுமூர
  


1. பொருள் : பக்கம் 81ல் காண்க.