பக்கம் எண் :

கற்பியல் சூ.6105
 

மனைநகு வயலை மானிவர் கொழுங்கொடி
யரிமலராம்பலொ டார்தழைதைஇ
விழவாடு மகளிரொடு தழுவணிப் பொலிந்து
மலரே ருண்கண் மாணிழை முன்கைக்
குறுந்தொடி துடக்கிய நெடுந்தொடர் விடுத்த
துடன்றனள் போலுநின் காதலியெம்போற்
புல்லுளைக் குடுமிப் புதல்வற் பயந்து
நெல்லுடை நெடுநகர் நின்னின்றுறைய
வென்ன கடத்தளோ மற்றே தன்முகத்
தெழுதெழில் சிதைய வழுதனளேங்கி
வடித்தென வுருத்த தித்திப்பல்லூழ்
கொடித்தெனச் சிவந்த மெல்விரற் றிருகுபு
கூர்நுதி மழுகிய வெயிற்ற
ளூர்முழுது நுவலுநிற் காணிய சென்மே.”
1
  

(அகம்-176)
  

எதிர்பெய்து மறுத்த ஈரமெனவே எதிர்ப்பெய்யாது மறுத்த ஈரமுங் கொள்க.
  

“கூர்முண் முள்ளிக் குவிகுலைக் கழன்ற
மீன்முள்ளன்ன வெண்கான்மாமலர்
பொய்தன் மகளிர் விழவணிக்கூட்டு
மவ்வயனண்ணிய வளங்கே ழூரனைப்
புலத்தல் கூடுமோ தோழியல்கற்
பெருங்கதவு பொருத யானைமருப்பி
னிரும்புசெய் தொடியினேர வாகி
மாக்கனணுடைய மார்பகம் பொருந்தி
முயங்கல் விடாஅ லிவையென மயங்கி
யானோ மென்னவு மொல்லார் தாமற்
றிவை பாராட்டிய பருவமுமுளவே
யினியே, புதல்வற்றடுத்த பாலொடு தடைஇத்
திதலை யணிந்த தேங்கொண் மென்முலை
நறுஞ்சாந் தணிந்த கேழ்கிள ரகலம்
வீங்க முயங்கல் யாம்வேண் டினமே
தீம்பால் பதடு றாமஞ்சினரே
யாயிடைக், கவவுக்கை நெகிழ்ந்தமை போற்றி
                            மதவுநடைச்
செவிலி கையென் புதல்வனை நோக்கி
நல்லோர்க் கொத்தனிர் நீயிரிஃதோ
  


1. பொருள் : பக்கம் 82ல் காண்க.