கூறேம் வாழிய ரெந்தை செறுநர் களிறுடை யருஞ்சமந் ததைய நூறு மொளிறுவாட் டானைக் கொற்கைச் செழியன் பிண்ட நெல்லினள்ளுரன்னவெம் மொண்டொடி நெகிழினு நெகிழ்க சென்றீ பெரும நிற்றகைக்குநர் யாரோ”1 |
(அகம்-46) |
காமக் கிழத்தி தன் மகத்தழீஇ ஏமுறு விளையாட்டு இறுதிக் கண்ணும்-மனையறத்திற்கு உரியளாக வரைந்து கொண்ட காமக்கிழத்தி, தலைவி புதல்வன் மனைப்புறத்து விளையாடுகின்றவனைத் தழுவிக்கொண்டு தான் ஏமுறுதற்குக் காரணமான விளையாட்டின் முடிவின் கண்ணும். |
அவள் எம்மைப் பாதுகாப்பீரோவென வினாயவழி அவனும் அதற்கு உடன்பட்டான்போலக் கூறுவன உளவாதலின் ‘ஏமுறு விளையாட்டு’ என்றார். ‘இறுதி’ என்றார் விளையாட்டு முடியுந்துணையுந்தான் மறைய நின்று பின்னர்க் கூறுதலின். |
உதாரணம் |
“நாயுடைமுதுநீர்க் கலித்த தாமரைத் தாதினல்லியயலிதழ்புரையு மாசிலங்கை மணிமருளவ்வாய் நாவொடுநவிலா நகைபடுதீஞ்சொல் யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத் தேர்வழங்கு தெருவிற்றமியோற் கண்டே கூரெயிற்றரிவை குறுகி யாவருங் காணுந ரின்மையிற் செத்தனள் பேணிப் |
|
1. பொருள் : சேற்றில் நிற்பதை வெறுத்த கரிய எருமையானது ஊர் தூங்கும் இரவில் கட்டறுத்துக் கொண்டு வேலியை கொம்பால் நீக்கி, நீர்மிக்க வயலில் மீன்கள் ஓட வள்ளைக் கொடியை மயக்கித் தாமரை மலரை உண்ணும்படியான ஊரனே! நின்னை யாம் புலத்தற்கு என்ன உறவினையுடையை? பிறரெல்லாம் மழைத் தாரையின் நீண்டு விளங்கும் கூந்தலுடைய ஒருத்தியை நீ நம் மனையிடத்து அழைத்துவந்து காட்டி அவளைவதுவை செய்தாய் என்பர். யாம் அதைக் கூறமாட்டேம். நீ வாழ்க. கொற்றச் செழியனது அள்ளூர் போலும் எனது ஒண்தொடி தோளினின்றும் நெகிழ்ந்து வீழினும் வீழ்க: பெரும! நீ நினைத்தவிடம் செல்க, நின்னைத் தடுப்பார் யார்? |