என்னும் மருதக்கலி (73)யுள் |
“நோதக்கா யெனநின்னை நொந்தீவா ரில்வழித் தீதிலேன் யானெனத் தேற்றிய வருதிமன் நெகிழ்ந்தொடி யிளையவரிடை முலைத்தாதுசோர்ந் திதழ்வனப்பிழந்தநின் கண்ணிவந்துரையாக்கால்” |
என்பன கூறி, |
“மண்டு நீராரா மலிகடல் போலுநின் றண்டாப் பரத்தை தலைக்கொள்ள நாளும் புலத்தகைப் பெண்டிரைத் தேற்றி மற்றியாமெனிற் றோலாமோ நின்பொய் மருண்டு.”1 |
எனவும் எங்கையரைத் தேற்றெனக் கூறியவாறு காண்க. |
செல்லாக் காலைச் செல்கென விடுத்தலும்-தலைவன் செல்லானென்பது இடமும் காலமும் பற்றி அறிந்த காலத்து ஊடலுள்ளத்தாற் கூடப்பெறாதாள் செல்கெனக் கூறிவிடுத்து ஆற்றுதற் கண்ணும். |
உதாரணம் |
“புள்ளுமிழகல்வயல்” |
என்னும் மருதக்கலி (79)யுள் |
“பூங்கட் புதல்வனைப் பொய்பல பாராட்டி நீங்காயிகவாய் நெடுங்கடை நில்லாதி யாங்கேயவர்வயிற் சென்றியணி சிதைப்பா னீங்கெம் புதல்வனைத் தந்து”2
|
“சேற்று நிலை முனைஇய செங்கட்காரா னூர்மடி கங்குலினோன்றளை பரிந்து கூர்முள் வேலி கோட்டினீக்கி நீர்முதிர் பழனத்து மீனுடனிரிய வந்தூம்புவள்ளை மயக்கித் தாமரை வண்டூது பனிமல ராருமூர யாரையோ நிற்புலக்கேம்வாருற் றுறையிறந்தொளிருந்தாழிருங் கூந்தற் பிறளுமொருத்தியை யெம்மனைத் தந்து வதுவையயர்ந்தனை யென்பவஃதியாங் |
|
1. பொருள் : பக்கம் 83ல் காண்க. |
2. பொருள் : பக்கம் 84ல் காண்க. |