பக்கம் எண் :

110தொல்காப்பியம் - உரைவளம்
 

னலம்பெறு கமழ்சென்னி நகையொடு துயல்வர
வுருவெஞ்சா திடைகாட்டு முடைகழலந்துகி
லரிபொலி கிண்கிணியார்ப்போவா தடிதட்பப்
பாலோடலர்ந்த முலைமறந்து முற்றத்துக்
கால்வறேர் கையினியக்கி நடைபயிற்றா
ஆலமர் செல்வனணிசால் பெருவிறல்
போல வருமென்னுயிர்.”

  

“பெரும, விருந்தொடு கைதூவாவெம்மையு முள்ளாய்
பெருந்தெருவிற் கொண்டாடி ஞாயர் பயிற்றத்
திருந்துபு நீகற்ற சொற்கள் யாங்கேட்ப
மருந்தோவா நெஞ்சிற் கமிழ்தயின் றற்றாப்
பெருந்தகாய் கூறு சில”.

  

“எல்லிழாய்,
சேய்நின்று நாங்கொணர்ந்த பாணன் சிதைந்தாங்கே
வாயோடி யேனாதிப் பாடியமென்றற்றா
நோய்நாந்தணிக்கு மருந்தெனப் பாராட்ட
வோவா தடுத்தடுத் தத்தா வென்பான்மாண
வேய்மென்றோள் வேய்த்திறஞ் சேர்த்தலுமற்றிவன்
வாயுள்ளிற் போகானரோ.
  

“உள்ளி யுழையே யொருங்கு படைவிடக்
கள்வர் படர்தந்ததுபோல தாமெம்மை
யெள்ளுமார் வந்தாரேயீங்கு.”

  

“ஏதப்பா டெள்ளிப்புரிசை வியலுள்ளோர்
கள்வரைக் காணாது கண்டேமென்பார் போலச்
சேய்நின்று செய்யாத சொல்லிச் சினவனின்
னாணை கடக்கிற்பார் யார்

  

“அதிர்வில் படிறெருக்கி வந்தென் மகன்மேல்
முதிர்பூண் முலைபொருத வேதிலாண்முச்சி
யுதிர்துகளுக்க நின்னாடை யொலிப்ப
வெதிர்வளிநின்றாய் நீ செல்.
  


உருளையோடுதல் வல்ல நடைவண்டியைக் கையாலே செலுத்தி நடைகற்று, ஆலின்கீழ் அமரும்
இறைவனின்  மகன்  முருகன்போல  வருகின்ற  என்உயிர்போன்றவனே!  (இது  தலைவி தன்
புதல்வனை  விளித்துக்  கூறியது).  இதன்  பின்னர்  உள்ளவற்றின் கருத்துகளைப் பக்கம் 86ல்
காண்க.