பக்கம் எண் :

கற்பியல் சூ.6111
 

இனியெல்லா யாம்,
தீதிலேமென்று தெறிப்பவுங் கைந்நீவி
யாதொன்று மெங்கண்மறுத்தர வில்லாயின்
மேதக்க வெந்தை பெயரனை யாங்கொள்வேந்
தாவா விருப்பொடு கன்றியாத் துழிச்செல்லு
மாபோற் படர்தகநாம்”
  

(கலி-81)
  

தந்தையர்     ஒப்பர் மக்கள் என்பதனால் அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலும்-அங்ஙனம்
விளையாடுகின்ற   காலத்து   மக்கள்   தந்தையரை   ஒப்பரென்னும்  வேதவிதி  பற்றி  முடிவில்லாத
சிறப்பினையுடைய மகனைப் பழித்து வெகுளுதற் கண்ணும்.
  

மகனுக்கும் இதுபடுமென்று கருதிக் கூறலின் தலைவனைப் பழித்தென்னாது ‘மகப்பழித்து’ என்றார்.
  

‘மைபடு சென்னி’ என்னும் மருதக்கலி (86)யுள்  

“வனப்பெலா நுந்தையை யொப்பினு நுந்தை
நிலைப்பாலு ளொத்த குறியென்வாய்க் கேட்டொத்தி
கன்றிய தெவ்வர்க் கடந்து களங்கொள்ளும்
வென்றி மாட்டொத்தி பெரும மற்றொவ்வாதி
யொன்றினேம் யாமென் றுணர்ந்தாரை நுந்தைபோன்
மென்றோ ணெகிழவிடல்”

  

என அவனைக் கொண்டு விளையாடியவழி அவன் தலைவன் மேல் வீழ்தலின்,
  

“தந்தை வியன்மார்பிற் பாய்ந்தானறனில்லா
வன்பிலி பெற்ற மகன்”

  

எனத் தன் திறத்து அன்பிலனென நெருங்கிக் கூறியவாறு காண்க.
  

கொடியோர் கொடுமை சுடுமென ஒடியாது நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப் பகுதியின்
நீங்கிய தகுதிக் கண்ணும்-கொடியோர் நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇ-கொடியோரென்றது
பாணர்  கூத்தர்  விறலியர் அந்தணர் முதலியோரை,  கொடியோராய்த்  தலைவன் புகழைக் கூறுதற்கு
விரும்பினோர் பரத்தையர்க்கு வாயிலாய்  வந்து  கூறிய  சொல்லோடே தானும் அவரிடத்தே சேர்ந்து
பகுதியின்  நீங்கிய கொடுமை-காவற் பாங்கிற் பக்கமும் ஆங்கோர் பக்கமுமாகிய பகுதி காத்தலினின்று
நீங்கிய பரத்தை