தலைவி: குதிரைதான் ஏறி வருவாய்; அதனை அறிந்தேன். கூந்தல் எனும் பிடரியும், கூந்தல் மேல் விரித்த சிகழிகை என்றும் தலையாட்டமும், கட்டுவடமாகிய கழுத்துக் கயிறும், புல்லிகை என்னும் காதணியாகிய கன்னசாமரையும், தெய்வ உத்தி எனும் அணியின் அருகே வடம்போல் தொங்கும் சுட்டி என்னும் சாட்டையும், உத்தரியம் எனும் கடிவாளமும் மணிகளாற் செய்த காழ்வடமாகிய கழுத்துக் கண்டிகையும், மேகலை எனும் கழுத்துத் தண்டையும் உடையதாய்க் காற்சதங்கையொலிப்பச் செலுத்தி நீ ஏறிய குதிரையை செண்டு வெளியில் (பரந்ததிடல்) அன்றி சாந்து பூசிய மாடத்தில் அழகிய நிலா முற்றத்தில் ஆதி என்னும் வேக கதியை அதற்குக் கொடுத்து அதனால் இளைத்தாய். அதனால் நீ நல்ல அரச வீரனாவாய் வாழ்க. ஞாயிறு தோன்றும் விடியலில் கைத்துடைப்பத்தால் குப்பையைப் பெருக்கித் தள்ளும் மதுரையில் முற்றம் போன்ற நின் மார்பிற் கீறியது குதிரையோ? அக்குதிரை கூரிய உகிரால் சிறந்த குளம்புடையது. கொடியது; அதில் ஏறும் நீ தப்பின்றி வாழ்க. மூங்கில் உழக்கு நாழிகளால் சேதிகை என்னும் வண்ணம் தோய்த்துக் குத்தின குதிரையுடல் போல நின் உடம்பிற் கவ்வியது. |