பக்கம் எண் :

114தொல்காப்பியம் - உரைவளம்
 

“அறிந்தேன் குதிரைதான்
பால்பிரியா வைங்கூந்தற் பன்மயிர்க் கொய்சுவன்
மேல்விரித் தியாத்த சிகழிகைச் செவ்வுளை
நீல மணிக்கடிகை வல்லிகை யாப்பின்கீழ்
ஞாலியன் மென்காதிற் புல்லிகைச் சாமரை
மத்திகைக் கண்ணுறையாகக் கவின்பெற்ற
வுத்தியொரு காழ்நூலுத்தரியத் திண்பிடி
நேர்மணி நேர்முக்காழ் பல்பல கண்டிகைத்
தார்மணி பூண்டதமனிய மேகலை
நூபுரப் புட்டிலடியொடமைத்தியாத்த
வார்பொலங் கிண்கிணியார்ப்ப வியற்றிநீ
காதலித் தூர்ந்த நின்காமக் குதிரையை
யாய்சுதை மாடத்தணி நிலாமுற்றத்து
ளாதிக்கொளீஇய வகையினை யாகுவை
வாதுவன் வாழிய நீ”

  

“சேகா, கதிர்விரிவைகலிற் கைவாரூஉக்கொண்ட
மதுரைப் பெருமுற்றம்போல நின்மெய்க்கட்
குதிரையோ வீறியது.
கூருகிர் மாண்ட குளம்பினதுவன்றே
கோரமே வாழி குதிரை.
வெதிருழக்கு நாழியாற் சேதிகைக் குத்திக்
குதிரையுடலணிபோலநின் மெய்க்கட்
குதிரையோ கவ்வியது.
சீத்தை பயமின்றி யீங்குக் கடித்தது நன்றே
வியமமே வாழி குதிரை
மிக நன்றினி யறிந்தேனின்று நீயூர்ந்த குதிரை
பெருமணம் பண்ணியறத்தினிற் கொண்ட
பருமக் குதிரையோவன்று, பெருமநின்
  


குதிரையோ? சீ.தனக்குப் பயனின்றி வடுப்படுத்தலாகா இடத்தே வடுப்படுத்தியது குதிரை.  அது
வியப்பேயாம். அதில் ஏறிய நீ வாழ்வாயாக.
  

இன்று  நீ  ஏறிய  குதிரை நன்று. அது நீ மணந்து கொண்ட காமக்கிழத்தியாகிய குதிரையன்று.
பாணன் தூது செல்லப் பரத்தையரிடம் மாறுபாட்டால்  வந்த  காற்றுப்  போலும்  கடியகுதிரை.
அதுவே நின்  உருவைக்  கெடுக்கும்.  அதில்  இனி  ஏறாதே.  அதன்மேல்  அரச  வீரனாய்
எந்நாளும் ஏறின் இங்கு வாராதே. இனித் தாழாமல் அக் குதிரையேறப்போ (என்று புலந்தாள்).