னேதில் பெரும்பாணன்றூதாடவாங்கேயோர் வாதத்தான் வந்தவளிக் குதிரையாதி யுருவழிக்கு மக்குதிரை யூரனீயூரிற் பரத்தை பரியாக வாதுவனாய் மற்றச் சாத் திரி குதிரை யேறியசெல்” |
(கலி-96) |
இதனுட் ‘பாணன் தூதாட வாதத்தான் வந்த குதிரை’ என்பதனால் அவன் கூட்டிய புதிய பரத்தையர் என்பதூஉம் அவன் பகுதியினின்று நீங்கியவாறுங் ‘குதிரையோ வீறியது’ என்பது முதலியவற்றாற் கொடுமை நெஞ்சைச் சுடுகின்றவாறும் அதனை நீக்கிய பரத்தையரைக் குதிரையாகக் கூறித் தான் அதற்குத் தகநின்றவாறுங் காண்க. |
கடவுட்பாட்டு ‘ஆங்கோர் பக்க’மும், யானைப் பாட்டுக் காவற் பாங்கின் பக்கமுமாம். |
கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக் காதல் எங்கையர் காணின் நன்றென மாதர் சான்ற வகையின் கண்ணும். கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி. அங்ஙனம் பகுதியினீங்கிப் பரத்தையர் மாட்டு ஒழுகிக் கொடுமை செய்த ஒழுக்கத்தைத் தலைவி பொறுத்தலை வேண்டி. |
அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கி-தன் அடிமேல் வீழ்ந்து வணங்கிய தலைவனை அதனின்மீது துனிமிக்குக் கழறி, காதல் எங்கையர் காணின் நன்றென-நின்மாட்டுக் காதலையுடைய எங்கையர் காணின் இவை நன்றெனக் கொள்வரெனக் கூறி, மாதர் சான்ற வகையின் கண்ணும்-காதல் அமைந்து மாறிய வேறுபாட்டின் கண்ணும். |
பொறாதாரைக் ‘கொள்ளார்’ என்பவாகலிற் கோடல் பொறுத்தலாயிற்று. காதலெங்கையர் ‘மாதர் சான்ற’ என்பனவற்றால் துனிகூறினார். எனவே யாங் கண்டதனாற் பயனின்றென்றார். |
உதாரணம் |
‘நில்லாங்கு நில்’ என்னும் பூழ்ப்பாட்டி (கலி-95) னுள் |
“மெய்யைப் பொய்யென்று மயங்கியகையொன் றறிகல்லாய் போறி காணீ1 |
|
1. பொருள் : யான்கூறும் மெய்யெல்லாம் பொய்யென்று மயங்கிய நீ உலக வொழுக்கத்தினை ஒன்றும் அறியாய் போல் இருந்தாய் எனத் தலைவன் கூறினன். |