நல்லாய் பொய்யெல்லா மேற்றித் தவறுதலைப் பெய்து கையொடு கண்டாய் பிழைத்தேனருளினி அருளுகம் யாம் யாரே மெல்லாதெருள வளித்து நீ பண்ணிய பூழெல்லா மின்னும் விளித்து நின்பாணனோடாடி யளித்தி விடலைநீ நீத்தலினோய் பெரிதேய்க்கு நடலைப் பட்டெல்லா நின்பூழ்”1 |
இதனுள் ‘அருளினி’ என அடிமேல் வீழ்ந்தவாறும், ‘அருளுகம் யாம் யார்’ எனக் காதல் அமைந்தவாறும் ‘விளித்தளித்தி’ என இப்பணிவை நின்பெண்டிர் கொள்வரெனவுங் கூறியவாறுங் காண்க. |
“நினக்கே யன்றஃதெமக்கு மாரினிதே நின்மார்பு நயந்த நன்னுதலரிவை வேண்டிய குறிப்பினையாகி யீண்டு நீ யருளா தாண்டுறை தல்லே”2 |
(ஐங்குறு-46) |
இதுவும் அது. |
தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை மாயப் பரத்தை உள்ளிய வழியும்-பரத்தையர் கருதி அணிந்த நன்றாகிய அணிகளையுடைய புதல்வனை மாயப் பரத்தைமையைக் குறித்த விடத்தும். |
அவருள் துனியாலே வருந்திய பரத்தையர் தம் வருத்தத்தினை உணர்த்தியும் தலைநின்றொழுகும் பரத்தையர் தஞ்சிறப்பு உணர்த்தியும் அணிவரென்றற்குக் ‘கண்ணிய’ என்றார். பரத்தையர்சேரி சென்று அணியணிந்ததற்கு வெகுண்டு கூறலிற் பொய்யாகிய பரத்தை என்றார். எனவே தலைவன் பரத்தைமை கருதினாளாயிற்று. |
உதாரணம் |
*“உறுவளிதூக்கு முயர்சினைமாவி னறுவடியாரிற்றவை போலழியக் கரந்தியானரக்கவுங் கைந்நில்லா வீங்கிச் சுரந்த வென்மென் முலைப்பால் பழுதாக நீ |
|
1. பொருள் : பக்கம் 89ல் காண்க. |
2. பொருள் : பக்கம் 84ல் காண்க. |
* பொருள் : பக்கம் 90ல் காண்க. |