நல்வாயிற் போத்தந்த பொழுதினானெல்லா கடவுட் கடிநகர் தோறுமிவனை வலங்கொளீஇ வாவெனச் சென்றாய் விலங்கினை யீரமிலாத விவன்றந்தை பெண்டிருள் யாரிற் றவிர்ந்தனை கூறு. நீருள் அடைமரை யாயிதழ்ப்போது போற் கொண்ட குடைநிழற்றோன்று நின்செம்மலைக் காணூஉ விவன்மன்ற யானோவ வுள்ளங் கொண்டுள்ளா மகனல்லான் பெற்ற மகனென் றகனகர் வாயில் வரையிறந்து போத்தந்து தாயர் தெருவிற் றவிர்ப்பத் தவிர்ந்தனன் மற்றவர் தத்தங் கலங்களுட் கையுறை யென்றிவற் கொத்தவை யாராய்ந் தணிந்தார் பிறன்பெண்டி ரீத்தவை கொள்வானுமிஃதொத்தன் சீத்தை செறுத்தக்கான் மன்ற பெரிது. சிறுபட்டி ஏதிலார் கையெம்மையெள்ளுபு நீ தொட்ட மோதிரம் யாவோயாங் காண்கு” |