பக்கம் எண் :

120தொல்காப்பியம் - உரைவளம்
 

உதாரணம்
  

“மைபடு சென்னி” என்னும் மருதக்கலி (86)யுள்  

“மறைநின்று, தாமன்ற வந்தீத்தனர்
ஆயிழாய் தாவாத வெற்குத் தவறுண்டோ காவாதீங்
கீத்தை யிவனையாங் கோடற்குச் சீத்தையாங்
கன்றியதனைக் கடியவுங் கைந்நீவிக்
குன்றவிறுவரை கோண்மாவிவர்ந்தாங்குத்
தந்தை வியன்மார்பிற் பாய்ந்தானறனில்லா
வன்பிலி பெற்ற மகன்
1

  

என்புழி ‘அறனில்லா  வன்பிலி பெற்ற மகன்’ எனவும்,  ‘நின்  மகன்றாயாதல் புரைவதாங்கெனவே’
(அகம்-16) என்புழி நின்மகன்’ எனவும் பிரித்தவாறு காண்க.
  

இன்னாத்தொல் சூள்  எடுத்தற்  கண்ணும்-இன்னாங்குப்   பயக்குஞ்   சூளுறவினைத்   தலைவன்
சூளுறுவலெனக் கூறுமிடத்தும்.
  

தலைவன் ‘வந்த  குற்றம்  வழிகெட’ ஒழுகிக்  கனவிற் சூளுறவான் வந்த ஏதம் நீக்கி இக்காலத்துக்
கடவுளரையும்  புதல்வனையுஞ்  சூளுறுதலின் ‘இன்றை சூள்’ என்றார். அது களவுபோலச் சூளுறுதலின்
தொல்சூள் என்றார்.
  

உதாரணம்
  

‘ஒரூஉக் கொடியியனல்லார்” என்னும் மருதக்கலி  (88)யுள்    

“வேற்றுமையென்  கண்ணோவோராதி தீதின்மை
தேற்றக் கண்டீயாய் தெளிக்கு


1. பொருள் :  முன்னே  மறைவாய்  வந்திருந்து  பின்னர்  நாம்  அறியும்படி  வந்தார்  என்று
தலைவி  கூறினாள்.  அது கேட்ட தலைவன் தலைவியை நோக்கி, ஆயிழாய்! நினக்கு வருத்தம்
செய்ய நினையாத என்னிடம் தவறுண்டோ? யான்  எடுத்துக் கொள்ளும்படி இம்மகனைத் தடை
செய்யாமல் என்னிடம் கொடுப்பாயாக  என்று தலைவன்  கேட்ட அளவில் மகன் அவன் பால்
தாவிச் சென்றாள். அது கண்ட தலைவி,   சீ!  அறனில்லாத  அன்பில்லாத  தலைவன்  பெற்ற 
இப்புதல்வன் கோபித்துத்  தடுக்கவும் நில்லானாய் மலையடி  வரையில் சிங்கம் பாய்ந்தாற்போல
இவன் தோளில் பாய்ந்தான். என்று சொல்லி ஊடல் தீர்ந்தாள்.