இனித் தேற்றேம்யாம்1 தேர்மயங்கி வந்த தெரிகோதை யந்நல்லார் தார்மயங்கி வந்த தவறஞ்சிப் போர்மயங்கி நீயுறும் பொய்சூளணங் காகின்மற்றினி யார்மேல் விளியுமோ கூறு”2 |
எனத் தலைவி எம்மேலே இப்பொய்ச் சூளால் வருங்கேடு வருமென மறுத்தவாறு காண்க. |
காமக்கிழத்தியர் நலம் பாராட்டிய தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணும்-நலம் பாராட்டிய காமக்கிழத்தியர் தலைவி தன்னிற் சிறந்தாராகத் தன்னான் நலம் பாராட்டப்பட்ட இற்பரத்தையர் மேல் தீமையுறுவரென முடித்துக் கூறும் பொருளின் கண்ணும். |
உதாரணம் |
“மடவளம்ம நீயினிக் கொண்டோளே தன்னொடு நிகரா வென்னொடு நிகரிப் பெருநலந்தருக்குமென்ப விரிமலர்த் தாதுண் வண்டினும் பலர்நீ யோதி யொண்ணுதல் பசப்பித்தோரே”3 |
(ஐங்குறு-67) |
இதனுள் இப்பொழுது கிடையாதது கிடைத்ததாக வரைந்து கொண்ட பரத்தை தன்னொடு இளமைச் செவ்வி ஒவ்வா என்னையுந் தன்னோடொப்பித்துத் தன் பெரிய நலத்தாலே மாறுபடுமென்பவென அவள் நலத்தைப் பாராட்டியவாறும் நீ பசப்பித்தோர் வண்டு தாது உண்ட மலரினும் பலரெனத் தீமையின் முடித்தவாறுங் காண்க. |
|
1. பொருள் : என்னிடத்துண்டாம் மெய்வேறுபாட்டை நீ நினையாதே; அதுவே நினக்குத்தக்கது. என்னிடம் தவறில்லாமையை நான் நினக்குத் தெளிவிக்கக் காண்பாய்; நான் இப்பொழுது தேற்றுவேன். |
2. பொருள் : பக்கம் 92 ல் காண்க. |
3. பொருள் : தலைவ! நீ இப்போது கொண்டு நுகரும் காமக்கிழத்தியானவள் தனக்கு ஒப்பாகாத என்னொடு தான் ஒப்பதாகக் கருதித் தன் அழகை வியந்து என்னைப் பழிக்கும் என்பர். முன்னமே தலைவனால் நுகரப்பட்டு நுதல் பசப்பிக்கப்பட்ட மகளிர் வண்டினம் தேன் உண்டு கழித்த மலர்களினும் பலராவர்; இதை அவள் அறியாள். |