பக்கம் எண் :

122தொல்காப்பியம் - உரைவளம்
 

“அணிற் பல்லன்ன”   

(குறுந்-49)
 

என்னும் பாட்டுக் கற்பாகலின் இதன் பாற்படும்.
  

கொடுமையொழுக்கம்  தோழிக்கு  உரியவை  வடுவறு  சிறப்பிற்  கற்பில்  திரியாமைக்  காத்தலும்
உவத்தலும் பிரித்தலும்  பெட்டலும்  ஆவயின்  வரூஉம்  பல்வேறு  நிலையினும், கொடுமை ஒழுக்கம்
தோழிக்கு  உரியவை-பரத்தையிற் பிரிவும்  ஏனைப்  பிரிவுகளும்  ஆகித்  தலைவன்  கண்  நிகழுங்
கொடுமையொழுக்கத்தில் தோழி  கூறுதற்கு  உரியளென  மேற்கூறுகின்றவற்றைக் கேட்ட வழி, வடுவறு
சிறப்பிற்  கற்பில்  திரியாமை-எஞ்ஞான்றுங்  குற்றமின்றி  வருகின்ற  பிறப்பு  முதலிய  சிறப்பிடத்துங்
கற்பிடத்துந்   திரிவுபடாதபடி,  காய்தலும்   உவத்தலும்  பிரித்தலும்  பெட்டலும்  நிலையினும்-தோழி
கூற்றினை  வெகுளலும்  மகிழ்தலும்  அவளைப்  பிரித்தலும்  பின்னும் அவள் கூற்றினைக் கேட்டற்கு
விரும்புதலுமாகிய  நிலையின்  கண்ணும்  ஆவயின்  வரூஉம்  நிலையினும்  -  அத்  தோழியிடத்துத்
தலைவனைக்  காய்தலும்  உவத்தலும்  பிரித்தலும் பெட்டலுமாய் வரும் நிலையின் கண்ணும், பல்வேறு
நிலையினும் -இக்கூறியவாறன்றிப் பிறவாற்றாய்ப் பலவேறுபட்டுவரும் நிலையின் கண்ணும்.
  

அவள் வயினென்னாது ‘ஆவயின்’ என்றார், தோழியும் பொருளென்பது பற்றி.
  

“இது மற்றெவனோ தோழி துனியிடை
யின்னரென்னு மின்னாக் கிளவி
யிருமருப் பெருமையீன்றணிக் காரா
னுழவன்யாத்த குழவியினகலாது
பாற்பெய் பைம்பயிராருமூரன்
றிருமனைப் பல்கடம்பூண்ட
பெருமுது பெண்டிரேமாகிய நமக்கே”
1
  

(குறுந்-181)


1. பொருள் : தோழி! ஈன்ற அணிமையுடைய கரிய எருமை ஆன், உழவர் கட்டிய தன் கன்றைவிட்டு
அகலப் போக மனமில்லாமல்  பக்கத்தேயுள்ள  பயிரை  மேயும்படியான  ஊரனாகிய  தலைவனது
வீட்டின்கண் இருந்து பல கடமைகளைச் செய்யும் பெண்டிரேம் ஆயினோம். அப்படிப்பட்ட எமக்கு
அத்தலைவரைப் பற்றி ஊடியிருக்கும் புலவிக்காலத்து  அவர்  இப்படிப்பட்டவர்  என்பது  போலக்
கேட்டதற்கு இன்னாச் சொற்களை நீ கூறுதல் என்னை?