இது தோழி இன்னாக் கிளவி கூறியதனை இது பொழுது கூறி பயந்ததென்னெனக் காய்ந்து கூறினாள். |
“பார்பக வீழ்ந்த வேருடை நெடுங்கோட் டுடும்படைந்தன்ன நெடும்பொரிவிளவி னாட்டொழி பந்திற் கோட்டுமுக்கிறுபு கம்பலத்தன்ன பைம்பயிர்த் தாஅம் வெள்ளில் வல்சிவேற்று நாட்டாரிடைக் சேறு நாமெனச் சொல்லச் சேயிழை நன்றே புரிந்தோய் நன்று செய்தனையே செயல்படு மனத்தர் செய்பொருட் ககல்வராட வரதுவதன் பண்பே”1 |
(நற்றிணை-24) |
இது செய்தனையெனத் தலைவி உவந்து கூறியது. |
“வண்டுபடத்ததைந்த கொடியிணரிடையிடுபு பொன்செய் புனையிழை கட்டிய மகளிர் கதுப்பிற்றோன்றும் புதுப்பூங் கொன்றைக் கானங் காரெனக் கூறினும் யானோ தேறேனவர் பொய் வழங்கலரே”2 |
(குறுந்-21) |
|
1. பொருள் : தோழீ! நிலம்பிளக்கத் துளைத்துச் செல்லும் வேரும் கிளைகளும் உடும்பு பதித்து வைத்தாற் போலச் சொரசொரப்புடைய நெடிய விளாமரத்தின் பழங்கள் காம்பு மூக்கு இற்று பச்சை நிறக் கம்பளம் விரித்தாற்போல உள்ள பரந்த பச்சைப் பயிரின் இடையிடையே ஆடிவிட்டுவிட்டுப் போன பந்துகள் போல் வீழ்ந்து கிடக்கும் விளாம்பழங்களையே உணவாகக் கொள்ளும்படியுள்ள வேற்று நாடு செல்வதற்கரிய வழிகளுள்ள சுரத்தில் பொருள் செய்யச் செல்வேம்யாம் எனத் தலைவர் சொல்ல அதற்கு நீ நன்று என விருப்பம் தெரிவித்தாய் மிக நன்று. ஏன் எனின் ஆடவாது பண்பு எனப்படுவது பொருளீட்டும் மனத்தராய் அகல்வது ஆகும். ஆதலினால். |
2.பொருள் : வண்டு மொய்க்கும் பூங்கொத்துகளை இலைகளின் இடையிடையே கொண்டு தலையணிகள் இடையிடையேயுள்ள மகளிர் கூந்தலைப் போலத் தோன்றும் கொன்றை மரங்கள் உள்ள காடானது தான் பூத்து இக்காலம் கார்காலம் எனக் கூறினாலும் யான் நம்பமாட்டேன். ஏன் எனின் கார்காலத்து வருவேன் என்ற காதலர் வாராமையின் அவர் பொய் கூறார் ஆகலின், |