இது கானங் காரெனக் கூறவும் வாராரென்றவழி அது கூறினும் யானோ தேறேனெனப் பிரிநிலை ஓகாரத்தாற் பிரிந்தது. |
“யாங்கறிந்தனர் கொறோழிபாம்பி னுரி நிமிர்ந்தன்ன வுருப்பவிரமயத் திரை வேட்டெழுந்த சேவலுள்ளிப் பொறிமயிரெருத்திற் குறுநடைப்பேடை |
“பொரிகாய்க் கள்ளி விரிகாயங் கவட்டுத் தயங்கவிருந்து புலம்பக்கூஉ மருஞ்சுர வைப்பிற்கானம் பிரிந்து சேணுறைதல் வல்லுவோரே”1 |
(குறுந்-154) |
இது, வல்லுவோர் என்னும் பெயர் கூறித் தோழி கொடுமை கூறியவழி அவனையே பிரிதல்வன்மை யாங்கறிந் தனரெனத் தலைவி வினவுதலின் அது பின்னுங் கேட்டற்கு அவாவியதாம். |
இனித் தோழியிடத்துத் தலைவனைக் காய்தல் முதலியன வருமாறு. |
“நன்னலந் தொலைய நலமிகச்சாஅ யின்னுயிர் கழியினு முரையலவர்நமக் கன்னையு மத்தனு மல்லரோ தோழி புலவியதெவனோ வன்பிலங்கடையே”2 |
(குறுந்-93) |
இது காய்தல். |
“வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மட நடை நாரை பதைப்பத்ததைந்த நெய்தல் கழிய வோதமொடு பெயருந் துறைவற்குப் |
|
1. பொருள் : தோழீ! பாம்பின் தோல் மேலே சென்றால் ஒத்தவானம் வெப்பம் விளங்கும் அமையத்தில் உணவு விரும்பிப் பிரிந்த சேவலை நினைத்து புள்ளிகளுடைய மயிரினையுடைய கழுத்தையும் குறுநடையையும் உடைய பெண்புறாவானது கள்ளிச் செடியின் கிளையில் இருந்து தன் தனிமையைப் புலப்படுத்திக் கூவும்படியான கடத்தற்கரிய சுரவழியுடைய காட்டிடத்து நம்மைப் பிரிந்து நீண்டகாலம் உறைதற்கு வல்லவராகிய தலைவர் அவ்வாறு உறைதற்குரிய வல்லமையை எங்கு அறிந்தார்? |
2. பொருள் : பக்கம் 94 ல் காண்க. |