மலையுடை யருஞ்சுர மென்பநம் முலையிடை முனிநர் சென்றவாறே”1 |
(குறுந்-39) |
“எறும்பியளையிற் குறும்பல் சுனைய வுலைக்கல்லன்ன பாறையேறிக் கொலைவிலெயினர் பகழிமாய்க்குங் கவலைத் தென்பவவர் தேர்சென்றவாறே யதுமற்றலங் கொள்ளாது நொதுமல கழறுமிவ் வழுங்கலூரே”2 |
(குறுந்-12) |
இவை வழியருமை கேட்டவழிக்கூறியன. |
“நுண்ணெழின் மாமைச் சுணங்கணியாகந்தங் கண்ணொடு தொடுத்தென நோக்கியு மமையாரென் னொண்ணுத னீவுவர் காதலர் மற்றவ ரெண்ணுவ தெவன்கொலறியே னென்னும்”3 |
(கலி-4) |
இது செலவுக் குறிப்பறிந்து தோழிக்குக் கூறியது கொண்டு கூறிற்று. |
“பலர்புகழ் சிறப்பினுங்குரிசிலுள்ளிச் செலவுநீ நயந்தனை யாயின் மன்ற |
|
1. பொருள் : தோழீ! நம்முலையிடைத் துயிலுதலை வெறுத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைவர் சென்ற வழி கடுங்காற்று வீசுதலால் வாகை நெற்றுகள் ஒலிக்கும்படியான மலைகளையுடைய அரிய சுரம் என்று கூறுவர். அதற்கே அஞ்சுகிறேன். |
2. பொருள் : தலைவர் சென்ற வழியானது, எறும்புவளை போலும் சுனைகளையுடையதும் கொல்லன் ஊதுலைப் பட்டறை போல்வதும் ஆகிய பாறை மேல் ஏறி வேடர் அம்புகளைத் தீட்டும்படியாகவுள்ளது என்று கூறுவர். அவ்வழிக் கொடுமையுணர்ந்து அதுபற்றி வருத்தம் கொள்ளாமல் நொதுமலர் பேசுவதுபோல நொதுமல் சொற்களைச் சொல்லி என்னை இடித்துரைக்கும் இவ்வழுங்கல் ஊர். |
3. பொருள் : நுண்ணிய எழிலையும் மாமை நிறத்தையும் உடைய சுணங்கு பரந்த முலையினைத் தம் கண்ணில் கட்டியதுபோல நெருங்கிப் பார்த்தும் வேட்கை தணியாராய்ப் பின்னும் என்நுதலையும் தடவிக் கொடுப்பர் காதலர். இப்படி அவர் அளவு மிஞ்சிய அன்பு காட்டுதற்கு அவர் எண்ணியது யாது என்பதையான் அறியேன் என்னும் தலைவி. |