வின்னாவரும்பட ரெம்வயிற் செய்த பொய்வலாளர் போலக் கைவல் பாணவெம்மறவாதீமே”1 |
(ஐங்குறு-473) |
இது தூதுவிடக் கருதிக் கூறியது. |
“சூழ்கம் வம்மோ தோழி பாழ்பட்டுப் பைதறவெந்த பாலைவெங்காட் டருஞ்சுர மிறந்தோர் தேஎத்துச் சென்ற நெஞ்ச மீட்டிய பொருளே”2 |
(ஐங்குறு-317) |
இது நெஞ்சினைத் தூதுவிட்டுக் கூறியது. |
“மையறு சுடர்நுதல் விளங்கக் கறுத்தோர் செய்யரண் சிதைத்த செருமிகுதானையொடு கதழ்பரி நெடுந்தேரதர் படக்கடைஇச் சென்றவர்த் தருகுவலென்னு நன்றாலம்ம பாணனதறிவே”3 |
(ஐங்குறு-474) |
இதுபாணனைத் தூதுவிட்டுக் கூறியது. |
“புல்வீழிற்றிக் கல்லிவர் வெள்வேர் வரையிழி யருவியிற்றோன்று நாடன் றீதினெஞ்சத்துக் கிளவி நம்வயின் நயந்தன்று வாழிதோழி நாமு |
|
1. பொருள் : இசையிற் கைவல்வ பாணனே! பலரும் புகழும் சிறப்புடைய குரிசிலாகிய தலைவரை நினைத்து அவர் சென்ற நாட்டிற்குச் செல்ல விரும்பினாயாயின் இனியதல்லாத அரியதுயரை எம்மிடம் செய்து பொய்யில் வல்லவர் மறந்தமைபோல நீ எம்மை மறவாதே. |
2. பொருள் : தோழீ! பாழ்பட்டுப் பசுமை நீங்கி வெந்த பாலையாகிய கொடிய காட்டுச் சுரவழியில் நம்மைப் பிரிந்து சென்ற தலைவரிடத்துச் சென்ற நம் நெஞ்சம் மீளாது நீண்டகாலம் அங்கிருத்தற் காரணம் யாதென ஆராய்வோம் வருக. |
3. பொருள் : தோழீ! இப்பாணனானவன், பகைவர் கொண்ட அரண்களைச் சிதைத்த போரில் மிக்க சேனைகளுடன் தன் பரித்தேரை வழிகெடச் செலுத்திச் சென்ற நம் தலைவரை நம் நுதல் விளக்கமுறும்படி அழைத்து வருவேன் என்று கூறும் அவன் அறிவு மிக நன்று. |