பக்கம் எண் :

128தொல்காப்பியம் - உரைவளம்
 

நெய்பெய்தீயினெதிர் கொண்டு
தாமணந்தனைய மெனவிடுகந்தூதே”
1
  

(குறுந்-106)
  

இது தூது கண்டு கூறியது.
  

“ஆம்பற் பூவின் சாம்பலன்ன
கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ
முன்றிலுணங்கன் மாந்திமன்றத்
தெருவினுண்டாது குடைவனவாடி
யில்லிறைப் பள்ளிதம் பிள்ளையொடுவதியும்
புன் கண்மாலையும் புலம்பு

மின்று கொறோழியவர் சென்ற நாட்டே”
2
  

(குறுந்-46)
  

இது சென்ற நாட்டு இவை இன்று கொலென்றது.
  

“வாராராயினும் வரினுமவர் நமக்
கியாராகியரோ தோழி நீர
நீலப்பைம்போ துளரிப்புதல
பீலியொண்பொறிக் கருவிளையாட்டி
நுண்முள் ளீங்கைச் செவ்வரும்பூழ்த்த
வண்ணத் துய்ம்மல ருதிரத்தண்ணென்
றின்னா தெறிவரும் வாடையொ
டென்னாயினள் கொலென்னாதோரே”
3
  

(குறுந்-110) 

1. பொருள் : தோழீ! புல்லிய இற்றி மரத்தின் வேரானது அருவி போலத் தோன்றும் மலைநாடன் 
தீதற்ற நெஞ்சம்  உடையான்  என்னும்  சொல்  தூதுவன் மூலம் நமக்கு வந்தது. அச்சொல்லை
நாம்  தீயானது  நெய்யை  ஏற்பதுபோல  ஏற்று  தூதுவனிடமே  யாம் முதலில் மணந்த காலம்
போன்ற மகிழ்வுடையேம் என்று சொல்லி விடுவோமாக.
  

2. பொருள் : தோழீ!  வீட்டில்  உறைகின்ற  ஆம்பலின்  வாடிய  மலர்  போலும்  சிறகுடைய
குருவி முற்றத்தில் காயவைத்திருக்கும் உணங்கலையுண்டு ஊர்மன்றத்து மலர்களின் தாதுக்களில்
குளித்துப்  பின்  வீட்டின்   இறப்பில்  மெத்தையில்  தன்  குஞ்சுகளுடன் உறையும் படியான  
மாலைக்காலமும்  தனிமையுணர்வும்  அவர்  சென்ற  நாட்டில் இல்லையோ? உண்டு. ஆதலின்
அவர் விரைந்து வருவர் என ஆற்றியிருப்பேன்.
  

3. பொருள் : தோழீ! சுனைநீரிற் பூத்த நீலப் பூக்களைக் கிளறி, புதரில் பூத்த கருவிளை மலரை 
ஆட்டி ஈங்கை மலர்கள் உதிரும்படி வீசுகின்ற வாடைக்காற்றால் நம் தலைவி என்ன வருத்தம் ஆனாளோ  என நினையாதவராய் தலைவர் நம்மை நினைந்துவாராராயினும்  வருவாராயினும் 
நமக்கு  எத்தகைய உறவினராவர்?