பொன்மலி பாடலி பெறீஇயர் யார்வாய்க் கேட்டனை காதலர்வரவே”1 |
(குறுந்-75) |
இது, தலைவன் வரவை விரும்பிக் கூறியது. |
“இம்மையாற் செய்ததை யிம்மையே யாம்போலு மும்மையா மென்பவரோரார் கா ணம்மை யெளியரென நினைத்த வின்குழலாரேடி தெளியச் சுடப்பட்டவாறு” |
(திணை-நூற்-123) |
இது, குழல் கேட்டுத் தோழிக்குக் கூறியது. |
“பெருங்கடற்றிரையது சிறுவெண் காக்கை நீத்து நீரிருங்கழி யிரைதேர்ந்துண்டு பூக்கமழ் பொதும்பர்ச் சேக்குந் துறைவனொ டியாத்தேம் யாத்தன்று நட்பே யவிழ்த்தற் கரித்து முடிந்தமைந் தன்றே”2 |
(குறுந்-313) |
இது, தலைவன் தவறிலனென்று கூறியது. |
“உடலினே னல்லேன் பொய்யாதுரைமோ யாரவண் மகிழ்ந தானேதேரொடு தளர்நடைப் புதல்வனை யுள்ளிநின் வளமனை வருதலும் வௌவியோளே”3 |
(ஐங்குறு-66) |
|
1. பொருள் : பாண! தலைவர் வருகையை நீ பார்த்தாயா? கண்டார் சொல்லக் கேட்டாயா? உண்மையறிய விரும்புகின்றேம். சொல். நீ சொல்லின் யானைபடியும் சோணையாறுள்ள பாடலி என்னும் நகரத்தைப் பெறுவாய்.யார் வாய்க் கேட்டாய்? |
2. பொருள் : கடற்கரைச் சிறு வெண் காக்கையானது நீந்தும்படியாக மிக்க நீருடைய கழியிடங்களில் இரையை ஆராய்ந்து உண்டு சோலையில் தங்கும்படியான துறைவனோடு யான் என்னை நன்றாகப் பிணைத்துக் கொண்டேன். அப்படி பிணைத்த நட்பானது நன்றாகப் பிணைக்கப்பட்டதேயாம். யாராலும் அவிழ்த்தற்கரிது. உறுதிப்பட்டதாகும் அது. |
3. பொருள் : மகிழ்ந! தேருடன் தளர்நடையிட்டுவரும் புதல்வனை நினைத்து நீ வளமனைக்கு வரவும் நின்னைத் தடுத்துத் தன்பால் வௌவியவள் யார்? உன்னைச் சினந்து வினவவில்லை. பொய் கூறாது மெய் கூறுக. |