இது, புதல்வனை நீங்கிய வழிக் கூறியது. |
“கண்டனெமல்லமோ மகிழ்ந நின்பெண்டே பலராடு பெருந்துறை மலரொடுவந்த தண்புனல் வண்டலுய்த்தென வுண்கண் சிவப்பவழுது நின்றோளே”1 |
(ஐங்குறு-69) |
இது காமஞ்சாலா விளமையோளைக் களவின் மணந்தமை அறிந்தேனென்றது. |
வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇ-வாயில்தன் ஏதுவாகத் தலைவிக்கு வருங்கூற்றுவகையோடு கூட்டி. |
வாயில்களாவார் செய்யுளியலுட் (512) கூறும் பாணன் முதலியோர். ‘வகை’ என்றதனான், ஆற்றாமையும் புதல்வனும் ஆடை கழுவுவாளும் பிறவும் வாயிலாதல் கொள்க. |
“கொக்கினுக் கொழிந்த தீம்பழங் கொக்கின் கூம்பு நிலையன்ன தகைய வாம்பற் றூங்கு நீர்க்குட்டத்துத் துடுமெனவீழுந் தண்டுறை யூரன் றண்டாப் பரத்தமை புலவா யென்றி தோழி புலவேன் பழனயாமைப் பாசறைப் புறத்துக் கழனிகாவலர் சூடுந் தொடைக்குந் தொன்று முதிர்வேளிர் குன்றூரன்னவென் னன்மனை நணிவிருந்தயரும் கைதூவின்மையி னெய்தாமாறே”2 |
(நற்-280) |
இந் நற்றிணை தலைவனொடு புலவாமை நினக்கு இயல்போ |
|
1. பொருள் : மகிழ்ந! பலரும் நீராடும் பெருந்துறையில் மலரொடு வந்த தண்புனலானது தான் இழைத்து ஆடிய வண்டலம் பாவையைச் சிதைக்கவே கண் சிவப்ப அழுது நின்றாள் ஒருத்தி. அவள் நின்னால் விரும்பப்பட்ட பெண்டுதான் எனக் கண்டேன் அல்லவோ. நீமறைப்பது என்னை? |
2. பொருள் : தோழீ! கொக்கு வந்து தங்கியதால் காம்பிற்று இனிய மாங்கனியானது, ஆம்பல் தங்கிய நீர்க்குளத்தில் துடும் என வீழும் நீர்த்துறைவனது பரத்தமைக்காகப் புலவாதே என்றாய். யாமை முதுகுபுறம் போலும் பாறையில் நத்தையைச் சுட்டு உடைக்கும் வேளிரது குன்றூர் போலும் எனது நல்ல மனையில் வருவிருந்தினரைப் போற்றும் செயல் ஒழியாமையால் அவனை எதிர்ப்படவில்லை; அதனால் புலத்தலும் இல்லை. இல்லையேல் புலப்பேன். |