வென்ற தோழிக்கு விருந்தாற் கைதூவாமையின் அவனை எதிர்ப்படப் பெற்றிலேனல்லது புலவேனோ என்றவாறு. |
“அன்னா யிவனோரிளமாணாக்கன் றன்னூர் மன்றத் தென்னன்கொல்லோ விரந்தூணிரம்பா மேனியொடு விருந்தினூரும் பெருஞ்செம்மலனே”1 |
(குறுந்-33) |
இது, பாணன் சொல் வன்மைக்குத் தோற்று வாயில் நேர்ந்த தலைவி தோழிக்கு உரைத்தது. |
“காண்மதி பாணநீ யுரைத்தற்குரியை துறைகெழுகொண்கன்பிரிந்தென விறைகேழெல்வளை நீங்கிய நிலையே” |
(ஐங்குறு-140) |
இது பரத்தையிற் பிரிந்துழி அவன்நின் வார்த்தையே கேட்பனென்பது தோன்றப் பாணற்குத் தலைவி கூறியது. |
“ஆடியல் விழுவினழுங்கன்மூதூ ருடையோர்ப் பன்மையிற் பெருங்கைதூவா வறனில் புலைத்தியெல்லி தோய்த்த புகாப்புகர்க் கொண்ட புன்பூங் கலிங்கமொடு வாடாமாலை துயல் வரவோடிப் பெருங்கயிறு நாலுமிரும்பனம்பிணையற் பூங்கணாய மூக்கவூங்கா ளழுதனள் பெயருமஞ்சிலோதி நல்கூர் பெண்டின் சில்வளைக்குறுமக ளூசலுறுதொழிற் பூசற்கூட்டா நயனின் மாக்களொடு குழீஇப் பயனின் றம்மவிவ் வேந்துடையவையே”2 |
(நற்றிணை-40) |
இது பாணனைக் குறித்துக் கூறியது. |
“நெய்யுங் குய்யு மாடிமெய்யொடு மாசு பட்டன்றே கலிங்கமுந்தோளுந் திதலை மென்முலைத்தீம்பால் பிலிற்றப் புதல்வற்புல்லிப் புனிறு நாறும்மே வாலிழைமகளிர் சேரித்தோன்றுந் தேரோற் கொத்தனெமல்லே மதனாற் |
|
1. பொருள் : பக்கம் 98ல் காண்க. |
2. பொருள் : பக்கம் 99ல் காண்க. |