வந்துழிக் கூறியது. ‘கூர்முண்முள்ளி’ என்னும் (26) அகப்பாட்டு ஆற்றாமை வாயிலாகச் சென்றுழித் தடையின்றிக் கூடியவாறு. |
“மாறாப் புண்போன் மாற்றச் சீற்றங் கனற்றப்பின்னும் புலவி கூர்ந்து தலைவன் கேட்ப முன்னிலைப் புறமொழியாகயான் நோமென்னவும் பொல்லாரென வலிதிற் கூறியவாறு காண்க. |
“பூங்கட் புதல்வனைப் பொய்பல பாராட்டி” (கலி-79) |
எனப் புதல்வனை வாயிலாகக் கொண்டு சென்றவாறு காண்க1. |
“நாடி நின்றூதாடித் துறைச்செல்லாளூரவ ராடைகொண்டொலிக்கு நின்புலைத்தி காட்டென்றாளோ கூடியார் புனலாடப் புணையாயமார்பினி லூடியாரெறிதர வொளிவிட்டவரக்கினை”2 |
(கலி-72) |
இஃது ஆடை கழுவுவாளை வாயிலென்றது. |
பிறவும் வேறுபட வருவனவெல்லாம் இதனாற் கொள்க. |
கிழவோள் செப்பல் கிழவது என்ப-இப்பத் தொன்பதுங்கிழவோளுக்கு உரிமையுடைத்தென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. முன்னர் நின்ற எழனுருபுமுகளைத் தொகுத்து இன்னதன் கண்ணும் இன்னதன் கண்ணுந்தலைவி செப்புதலை வாயிலின் வகையோடே கூட்டிக் கிழவோன் செப்பல் வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇ எனமாறுக. |
1. பக்கம் 84 ல் விளக்கவுரை காண்க. 2. பொருள் : கூடின மகளிர்க்குப் புனலாடத் தெப்பமாகிய நின்மார்பிலே புனலாடப் பெறாத மகளிர் ஊடல்கொண்டு நின்மேல் எறிந்த அரக்குச் செப்பினை, ஊரினர் ஆடைகளைக் கொண்டு ஒலிக்கும் புலைத்தி நினக்குரிய பரத்தையரைச் சேர்க்க நாடி நினக்குத் தூதாகித் திரிபவள் தனக்குங் ‘காட்டுவாயாக’ என நின்னைக் கேட்டாளோ? |