ஒல்லேம் என்ற தப்பற்குச் சொல்லா தகறல் வல்லுவோரே” |
(குறுந்-79) |
இதனுள் அஞ்சியவாறு காண்க, பிறவும் அன்ன. |
நச் |
இது, தலைவி கூற்றின்கட்படு வதோர் இலக்கணங் கூறுகின்றது. |
இதன் பொருள்: புணர்ந்து உடன்போகிய கிழவோள்மனை இருந்து-களவுக் காலத்துப் புணர்ந்து உடன் போகிய தலைவி கற்புக் காலத்து இல்லின் கண் இருந்து இடைச்சுரத்து இறைச்சியும் அன்புறுதக்க வினையுஞ் சுட்டிக் கிளத்தல் தானே தான் போகிய காலத்துக் காட்டின்கட் கண்ட கருப்பொருள்களையுந் தலைவன் தன்மேல் அன்பு செய்தற்குத் தக்க கருப்பொருளின் தொழில்களையுங் கருதிக் கூறுதல்தானே, கிழவோன் செய்வினைக்கு அச்சம் ஆகும்-தலைவன் எடுத்துக் கொண்ட காரியத்திற்கு முடித்தலாற்றான் கொலென்று அஞ்சும் அச்சமாம் என்றவாறு. |
எனவே, அருத்தாபத்தியாற் புணர்ந்து உடன் போகாத தலைவி மனைக்கணிருந்து தலைவன் கூறக்கேட்டு அக்கருப்பொருள்கள் தன்மேல் அன்புறுதக்க வினைகளைக் கூறுதல் தலைவன் செய்வினைக்கு அச்சமாகாது வருவரெனத் துணிந்து கூறுதலாமென்றாராயிற்று. |
“கானயானை தோனயந்துண்ட பொரிதாளோமை வளிபொரு நெடுஞ்சினை யலங்கலுலவையேறி யொய்யெனப் புலம்புதருகுரல புறவுப்பெடைபயிரு மத்த நண்ணிய வங்குடிச்சீறூர்ச் சேந்தனர் கொல்லோ தாமே யாந்தமக் |
1. பொருள் : தோழீ! நும்பிரிவையாம் பொறேம் என்று யான் கூறிய தவறு காரணமாக நம்மிடம் சொல்லாதே பிரிதற்கு வல்லமையுடைய நம் காதலர் காட்டுயானை தோலுண்ணும் ஓமை மரத்தின் உலர்ந்த கிளையில் ஏறிய பெண் புறாவானது தன் தனிமை தோற்றும் குரலால் ஆண் புறாவை அழைக்கும் படியான சுரவழி பொருந்திய சிறுகுடியுடைய சீறூரிலேயே நம்மை நினையாமல் தங்கி விட்டனரோ? அறியேன். |