தோழி கூற்று | 148. | பெறற்கரும் பெரும்பொருள் முடிந்தபின் வந்த தெறற்கரு மரபிற் சிறப்பின் கண்ணும் அற்றமழி புரைப்பினும் அற்றம் இல்லாக் கிழவோற் சுட்டிய தெய்வக் கடத்தினும் சீருடைப் பெரும்பொருள் வைத்தவழி மறப்பினும் அடங்கா ஒழுக்கத்து அவன்வயின் அழிந்தோனை அடங்கக் காட்டுதற் பொருளின் கண்ணும் பிழைத்துவந் திருந்த கிழவனை நெருங்கி இழைத்தாங் காக்கிக் கொடுத்தற் கண்ணும் வணங்கியல் மொழியான் வணங்கற் கண்ணும் புறம்படு விளையாட்டுப் புல்லிய புகர்ச்சியும்1 சிறந்த புதல்வனைத் தேராது புலம்பினும் மாணலந் தாவென வகுத்தற் கண்ணும் பேணா வொழுக்கம் நாணிய பொருளினும் சூள்வயின்2 திறத்தால் சோர்வுகண் டழியினும் பெரியோர் ஒழுக்கம் பெரிதெனக் கிளந்து பெறுதகை யில்லாப் பிழைப்பினும் அவ்வழி3 உறுதகை யில்லாப் புலவியின் மூழ்கிய கிழவோள் பால்நின்று கொடுத்தற் கண்ணும் உணர்ப்புவயின் வாரா வூடலுற் றோள்வயின் உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று தான்வெகுண் டாக்கிய தகுதிக் கண்ணும் அருமைக் காலத்துப் பெருமை காட்டிய எளிமைக் காலத்து இரக்கத் தானும் பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் பேணிச் சொல்லிய குறைவினை எதிரும் நீத்த கிழவனை நிகழுமாறு படீஇயர் காத்த தன்மையிற் கண்ணின்று பெயர்ப்பினும் பிரியுங் காலத்து எதிர்நின்று சாற்றிய மரபுடை யெதிரும் உளப்படப் பிறவும் வகைபட வந்த கிளவி யெல்லாம் தோழிக் குரிய என்மனார் புலவர் | (9) |
பாடம் 1. புகற்சியும் 2. சூள் நயத் 3. அவ்வயின |
|
|