நெய்தற் பூக்கள் கழியிடத்து அலைகள் வந்து மிகுந்தோறும் மூழ்கி வெளிப்படுதல் மகளிர் குளத்தில் மூழ்கும்போது அவர் கண்கள் மறைந்து வெளிப்படுவது போலத் தோன்றும்படியான நீர்த்துறைவன் தனக்குச் செய்த கொடுமையை நமக்கு வெட்கப்பட்டு மறைத்துப் பேசா நிற்பள். (இப்படிக் கூறித் தலைவனை அவள் பால் செல்க என்றாள்) 1. சோர்வு-கடைப்பிடியாது விடுதல். 2. பொருள் : மகிழ்ந! அரும்பு முதிர்ந்த புன்கமரத்தின் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் வெண்மணற் பரப்பானது வேலன் வெறியாடு களத்தில் நெற்பொரிகள் சிதறினாற் போக இருக்கக்கூடிய இடு மணல் உடைய எம் ஊரின் பெரிய நீர்த்துறையிடத்து எம் நேரிய சந்துடைய முன்கையைப் பற்றிச் சூரர மகளிரைக் காட்டிச் செய்யசூளுறவானது நீர் அதன்படி நடவாமையின் எம்மை வருத்தியது. * தலைமகளைப் பெறும் தகைமையில்லாத பரத்தமைச் செயலாகிய பிழைப்பில் பெரியோர் நடத்தை பெரிது எனச் சொல்லுமிடத்தும் எனக் கருத்துக் கொள்க. |