பக்கம் எண் :

கற்பியல் சூ.9149
 

எனவும் வரும்.
  

மாணலந்  தாவென  வகுத்தற்  கண்ணும்  என்பது-நீ  கொண்ட  நலத்தினைத் தந்துபோ எனக் கூறுதற்
கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.
  

“விட்டென விடுக்குநாள் வருகஅதுநீ
நொந்தனையாயின் தந்தனை சென்மோ
குன்றத்தன்ன குவவுமணல் அடைகரை
நின்ற புன்னை நிலந்தோய் படுசினை
வம்ப நாரை சேக்குந்
தண்கடற் சேர்ப்பநீ உண்டவென் நலனே”
1

(குறுந்-236)
  

எனவரும்.
  

பேணா   வொழுக்கம்2   நாணிய   பொருளினும்   என்பது-தலைமகளைப்  பேணாத  ஒழுக்கத்தினால்
தலைமகன் நாணிய பொருண்மைக் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.
  

உதாரணம்:
  

“யாயாகியளே மாஅயோளே
மடைமாண் செப்பில் தமியவைகிய
பெய்யாப் பூவின் மெய்சாயினளே
பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இனமீன் இருங்கழி யோதம் மல்குதொறும்
கயமூழ்கு மகளிர் கண்ணின் மானுந்
தண்ணந் துறைவன் கொடுமை
நம்முள் நாணிக்கரப்பாடும்மே.”
3

(குறுந்-9)
 

எனவரும்.


கவரும்  துறைவனை  நம்  கண்ணாற்  காண  இயையுமோ?  காண  இயையின் அவனை வளைத்து நீ
கவர்ந்து சென்ற எம் அழகைத் தருக என்பேம்.

1. பொருள்  : கடல்போற்  குவிந்த மணல் அடைகரையில் ஓங்கிய புன்னையின் தாழ்ந்த கிளையில் புதிய
நாரை வந்து   தங்கும்படியான  கடற்கரைச் சேர்ப்பனே! இவளைக் கைவிட்டாய் எனச் சொல்லுமாறு நீ
நீங்கும்  நாள் வரினும் வருக.    அந்நாள் வருகையை நீ விரும்பினாயாயின் முன்உண்ட என் நலனை
எனக்குத் தந்து செல்வாயாக.

2. பேணா ஒழுக்கம்-தலைவனின் பரத்தமையொழுக்கம்.

3. பொருள் :  தலைவ!  மாயோள்  செப்பில்  தனித்து  வைக்கப்பட்ட  அணியப்படாத  பூவைப்போல
வாடினாள்.