பக்கம் எண் :

156தொல்காப்பியம் - உரைவளம்
 

இனித் தலைமகட்குக் கூறியதற்குச் செய்யுள்.
  

“அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிறிதாற்றிப்
பின் இருந்து வாழ்வார் பலர்”
1

(குறள்-1160)
  

எனவரும்.
  

பிறவும்     வகைபட    வந்த  கிளவியெல்லாந்  தோழிக்குரிய  வென்மனார்  புலவர்  என்பது-மேற்
சொல்லப்பட்ட   கிளவியன்றிப்    பிறவாய்ப்பாட்டாற்   பாகுபடவந்த  கிளவி  யெல்லாந்  தோழிக்குரிய
என்றுரைப்பர் புலவர் என்றவாறு.
  

வகைபட   வந்த கிளவியாவன-பிரிந்த  தலைமகன் வருவனெனக்  கூறுதலும், பருவங் கண்டு கூறுதலும்,
வற்புறுத்தலும் நிமித்தங் கண்டு கூறுதலும்,   வந்தான் எனக் கூறுதலும்,  இந்நிகரனவும்  மேற்சொல்லப்பட்ட
இடங்களிற்  கூற்று  வேறுபாடாகி  வருவனவுங்   கொள்க.  அவற்றிற் களவுக்குங்  கற்பிற்கும் பொதுவாகி
வருவன அகத்திணையியலுட் கொள்க. கற்பிற்கே  உரித்தாகி வருவன ஈண்டுக் கொள்க.
  

உதாரணம்:
  

“ஆமா சிலைக்கும் அணிவரை ஆரிடை
ஏமாண் சிலையார்க்கினமா இரிந்தோடும்
தாமாண்பில் வெஞ்சுரஞ் சென்றார் வரக்கண்டு
வாய்மாண்டபல்லி படும்”
2

(கைந்நிலை 18)


வும்  எம்  சொற்களைக்  கொள்ளவில்லை.  ஆனால்  நீ’  செல்லும்வழியில்  உள்ள  மரங்கள்   வாட
அவற்றைத்  தழுவிப்  படரும்  பூங்கொடிகள் தடுப்பனவாகும். இவளைச் சேர்ந்திருந்தலை விடுவதை நீ
நினைவாயாயின் இவள் இறந்துபடும் என யாம் பணிந்து இரப்பவும் பிரியவே பலவும் சூழ்வாய். ஆனால்
நீ  செல்லும்  வழியில்  மரத்தில்  உள்ள  வாடிய  தளிர்கள்  தடுப்பனவாகும். என்று யான் நினக்குச்
சொல்லவும்  அவற்றை நெஞ்சிற்கொள்ளாய் ஆயினாய். இனி இவளைப் பார்ப்பார்க்கு இரக்கம் வருவது
போலவே  கண்டார் இரங்கத்தக்கனவாகிய மரம் கொடி தளிர் முதலியனவற்றைக் காட்டி உண்மை கூறும்
கேளிரைப் போல நீ செல்லும் செலவைத் தடுப்பன நீ செல்லும் காடுகளாம்.
  

1. பொருள்  : பிரிதற்கரிய  பிரிவைத்  தாங்கி,  அதனால்  வரும் துன்பத்தையும் நீக்கிப் பொறுத்திருந்து
இவ்வளவு நிகழ்ந்த பின்னும் உயிரோடு வாழ்வார் உலகில் பலர்.
  

2. பொருள் : காட்டுப்  பசுவானது  சிலைக்கும்  அழகிய  மலையின்  அரிய வழியில் அம்பு விளங்கும்
வில்லுடைய.