பக்கம் எண் :

கற்பியல் சூ.9157
 

இது நிமித்தங் கண்டு கூறியது.
  

“வாளியங் குண்கண் வைஎயிற்றோயே
ஞாலங் காவலர் வந்தனர்
காலை அன்ன மாலை முந்துறுத்தே”
1
  

இது தலைவன் வந்தமை கூறியது. பிறவும் அன்ன.
  

நச்
  

இது, முறையானே தோழிக்குரிய கூற்றுக் கூறுகின்றது.
  

இதன் பொருள்: பெறற்கு அரும் பெரும் பொருள் முடிந்த  பின்  வந்த  தெறற்கு   அரும்  மரபிற்
சிறப்பின்  கண்ணும்:  பெறற்கு  அரும்பெரும்  பொருள்   முடிந்தபின்   வந்த-தலைவனுந்   தலைவியுந்
தோழியும் பெறுதற்கரிதென நினைத்த பெரிய பொருளாகிய  வதுவை வேள்விச் சடங்கான்  முடிந்த பின்பு
தோன்றிய தெறற்கு அரும் மரபிற் சிறப்பின் கண்ணும்-தனது தெறுதற்கரிய மரபு   காரணத்தால் தலைவன்
தன்னைச் சிறப்பித்துக் கூறுமிடத்தும் தோழிகூற்று நிகழும்.
  

தலைவியையுந்     தலைவனையும் வழிபாடாற்றுதலின் ‘தெறற் கருமரபின்’ என்றார். தெறுதல்-அழன்று
நோக்குதல்.  சிறப்பு,  இவளை  நீ ஆற்றுவித்தலின் எம் உயிர் தாங்கினேம் என்றாற் போல்வன.  அவை
எம்பெருமானே  அரிதாற்றியதல்லது யான் ஆற்றுவித்தது உண்டோ வென்றானும் நின் அருளால்   இவள்
ஆற்றியதல்லது யான் ஆற்றுவித்தது உண்டோவென்றானுங் கூறுவனவாம்.
  

“அயிரை பரந்த வந்தண் பழனத்
தேந்தெழின் மலரத் தூம்புடைத் திரடா
ளாம்பல் குறுநர் நீர்வேட்டாங்கிவ
ளிடைமுலைக் கிடந்து நடுங்கலானீர்
தொழுது காண் பிறையிற் றோன்றி யாநுமக்


வேட்டுவர்க்கு  மான்  கூட்டம்  ஓடும்படியான  மாண்பில்லாத  வெம்சுரத்தே  சென்ற தலைவர் மீண்டு
வருவதைப் பார்த்து வாய்ச் சொல்லால் மாட்சிப்படும் பல்லியானது ஒலியெழுப்பும்.
  

1. பொருள் : ஒளி விளங்கும் மையுண்ட கண்ணும் கூரிய எயிறும் உடையவளே! காலைப் பகல் போலும்
மாலை நேரத்துக்கு முன்னதாகவே உலக காவலராகிய நம் தலைவர் வந்தார்.