பக்கம் எண் :

கற்பியல் சூ.9161
 

பிழைத்து    வந்து   இருந்த   கிழவனை   நெருங்கி    இழைத்து   ஆங்கு   ஆக்கிக்   கொடுத்தற்
கண்ணும்-பரத்தையர் மனைக்கண் தங்கி வந்து அகனகர்    புகுதாது  புறத்திருந்த தலைவனை மிகக் கழறிச்
சில மொழிகளைக்கூறி இதனானே தலைவி மனத்தின் கண்   ஊடல்   நீங்குந் தன்மை உளதாக்கிக் கூட்டும்
இடத்தும்.
  

உதாரணம்:
  

“நகை நன்றம்ம தானேயிறை மிசை
மாரிச்சுதையி னீர்ம்புறத்தன்ன
கூரற் கொக்கின் குறும்பறைச்சேவல்
வெள்ளிவெண்டோடன்ன கயல்குறித்துக்
கன்னா ருவகைக் கலிமகிழுழவர்
காஞ்சியங் குறுந்தறி குத்தித் தீஞ்சுவை
மென்கழைக் கரும்பினன் பலமிடைந்து
பெருஞ்செய் நெல்லின் பாசவல்பொத்தி
வருத்திக் கொண்டவல்வாய்க் கொடுஞ்சிறை
மீதழி கடுநீர் நோக்கிப் பைப்பயப்
பார்வலிருக்கும் பயங்கேழூர
யாமது பேணின்றோ விலமே நீநின்
பண்ணமை நல்யாழ்ப்பாணனொடு விசிபிணி
மண்ணார் முழவின் கண்ணதிர்ந்தியம்ப
மகிழ்துணைச் சுற்றமொடு மட்டுமாந்தி
யெம்மனை வாராயாகி முன்னா
ணும்மனைச் சேர்ந்த ஞான்றையம்மனைக்
குறுந்தொடி மடந்தை யுவந்தனணெடுந்தே
ரிழையணி யானைப் பழையன்மாறன்
மாடமலி மறுகிற் கூடலாங்கண்
வெள்ளத்தானையொடு வேறுபுலத்திறுத்த
கிள்ளி வளவனல்லமர் சாஅய்க்
கடும்பரிப் புரவியொடு களிறுபலவௌவி
யேதின் மன்னரூர்கொளக்
கோதைமார்ப னுவகையிற் பெரிதே”
1
  

(அகம் 346)


1. பொருள்:    கள்ளுண்ட உழவர்கள் நெல்வயற் பள்ளங்களில் நீர் நிறையுமாறு காஞ்சி மரத்துண்டுகளை
நட்டுக்  கருப்பங்கழிகளை இடையிடைக் கட்டி அமைத்த கரையினைக் கடந்து வழியும் நீரில் வரக்கூடிய
வெள்ளிய  மீன்களைக்  கவரவேண்டி  வெண்கொக்கானது பார்த்துக் கொண்டிருக்கும்படியான ஊரனே!
முன்னாளிலே,