பக்கம் எண் :

162தொல்காப்பியம் - உரைவளம்
 

“கேட்டிசின் வாழியோ மகிழ்நவாற்றுற
மைய நெஞ்சிற் கெவ்வந்தீர
நினக்கு மருந்தாகிய யானினி
யிவட்கு மருந்தன்மை நோமெனெஞ்சே”
1

(ஐங் - 59)
  

வணங்கியன்   மொழியான்   வணங்கற்   கண்ணும்-தாழும்  இயல்பினையுடைய  சொற்களால்  தோழி
தாழ்ந்து நிற்கும் நிலைமைக் கண்ணும்.
  

உதாரணம்:
  

“உண்டுறைப் பொய்கைவராஅலின மிரியுந்
தண்டுறை யூரதகுவகொ-லொண்டியைப்
பாராய் மனைத்துறந்தச் சேரிச்செல்வதனை
யூராண்மை யாக்கிக்கொளல்”
  

(ஐந்-எழு-54)
 

எனவரும்,
  

“பகலிற்றோன்றும் பல்கதிர்த்தீயி
னாம்பலஞ் செறுவிற்றேனூரன்ன
விலணலம் புலம்பப்பிரிய
வனை நலமுடையளோ மகிழ்ந நின்பெண்டே”
2

(ஐங்-57)
  

இதுவும் அதன்பாற்படும்.
  

புறம்படு   விளையாட்டும்   புல்லிய   புகற்சியும்-பரத்தையரிடத்தே   உண்டாம்   விளையாட்டினைத்
தலைவன் பொருந்திய மனமகிழ்ச்சிக் கண்ணும்.
  


நின்பாணனொடு     முரசு  முழங்கச்  சுற்றத்துடன்  கள்ளுண்டு  எம்  மனைக்கு     வாராமல்  நின்
பரத்தைமனைக்குச் சென்று தங்கியபோது, குறுந்தொடி மடந்தையாகிய பரத்தை கொண்ட உவகையானது,
கிள்ளிவளவனானவன்  கூடலில்  பழையன்  மாறனைப் போரிற் சாய்த்துக் கொண்ட வெற்றியைக் கண்டு
கோதை  மார்பன்  என்னும்  சேரவேந்தன்  கொண்ட  உவகையினும்  பெரிதாகும்.  யாங்கள் அதைப்
பொருட்படுத்தியதும்  இல்லை.  அப்படியிருக்க  நீ யாரையும் யான் அறியேன் என்றது மிக்க நகையை
உண்டாக்குவதாகும்.
  

1. பொருள்: மகிழ்ந! கேட்பாயாக. நின்  மயங்கிய  நெஞ்சத்தின்  வருத்தம்  தீர  ஆற்றுமாறு  நினக்கு
மருந்தாய் இருந்த யான் இனி இவளை ஆற்றும் மருந்தாய் இல்லாமைக்கு என் நெஞ்சம் வருந்தும்.
  

2. பொருள்: பக்கம் 146ல் காண்க.