பக்கம் எண் :

கற்பியல் சூ.9163
 

விளையாட்டாவது-யாறுங்குளனுங்காவும் ஆடிப்பதியிகந்து நுகர்தலாம்.
  

“பகுவாய் வராஅற் பல்வரி யிரும்போத்துக்
கொடுவா யிரும்பின் கோளிரை துற்றி
யாம்பன் மெல்லடை கிழியக்குவளைக்
கூம்புவிடு பன்மலர் சிதையப் பாய்ந்தெழுந்
தரில்படு வள்ளை யாய்கொடி மயக்கித்
தூண்டில் வேட்டுவன் வாங்கவாராது
கயிறடு கதச்சேப் போல மதமிக்கு
நாட்கய முழக்கும் பூக்கேழூர
வருபுனல் வையை வார்மண லகன்றுறைத்
திருமரு தோங்கிய விரிமலர்க்காவி
னறும்பல் கூந்தற் குறுந்தொடி மடந்தையொடு
வதுவை யயர்ந்தனை யென்பவலரே
கொய்சுவற் புரவிக்கொடித்தேர்ச் செழிய
னாலங் கானத் தகன்றலை சிவப்பச்
சேரல் செம்பியன் சினங்கெழுதிதியன்
போர்வல்லியானைப் பொலம்பூணெழினி
நாரரி நறவினெருமையூரன்
றேங்கமழ கலத்துப் புலர்ந்த சாந்தி
னிருங்கோவேண் மானியறேர்ப் பொருநனென்
றெழுவர் நல்வல மடங்கவொருபகன்
முரைசொடு வெண்குடையகப் படுத்துரைசெலக்
கொன்றுகளம் வேட்டஞான்றை
வென்றிகொள் வீரரார்ப்பினும்பெரிதே”
1

(அகம் 36)
 


1.  பொருள்:     வரால் மீனானது, தூண்டிலின் இரும்பில் உள்ள இரையை விழுங்கி அதில் அகப்பட்டு
ஆம்பல்  இலை  கிழியவும்  குவளை  மலர்சிதையவும்  பாய்ந்தெழுந்து  வள்ளைக்  கொடியை மயக்கி
தூண்டில்  வேட்டுவன் இழுக்கவும் வாராமல் கயிறு பூட்டியிழுக்கப்படும் கதமிக்க எருதுபோல மதம்மிக்கு
நாட்காலையில்  குளத்தைக்  கலக்கும்படியான  ஊரனே! வையைத் துறையில் மலர்க்காவில் குறுந்தொடி
மடந்தையாகிய   பரத்தையொடு   மணம்  அயர்த்தனையென்பர்.  அவ்வலரானது  தலையானங்கானம்
என்னும்  ஊரில்  செழியனானவன்,  சேரலன்,  செம்பியன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ
வேண்மான், பொருநன் என்னும் எழுவர்    பலம்  அடங்கக்  கொன்று வெற்றி கொண்டகாலத்து வீரர்
ஆர்த்த ஆர்ப்பரிப்பினும் பெரிதாகியது.