பக்கம் எண் :

கற்பியல் சூ.9165
 

“நுண்ஞான் வலையிற் பரதவர் போத்தந்த
பன்மீனுணங்கல் கவருந் துறைவனைக்
கண்ணினாற் காண வியையுங் கொலென்றொழி
வண்ணந்தாவென்கந்தொடுத்து”
1

(ஐந் - எழு-66)
  

இதுவும் அதன்பாற்படும்.
  

பேணா  ஒழுக்கம்  நாணிய  பொருளினும்  - பரத்தை தலைவியைப் பேணாது ஒழுகிய ஒழுக்கத்திற்குத்
தலைவி நாணிய பொருளின் கண்ணும் - தலைவற்குத் தோழி கூற்று நிகழ்த்தும்.
  

“பொய்கை நீர்நாய்ப் புலவு நாறிரும் போத்து
வாளை நாளிரை தேருமூர
நாணினென் பெரும யானே பாணன்
மல்லடு மார்பின் வலியுறவருந்தி
யெதிர்தலைக் கொண்ட வாரியப் பொருந
னிறைந்திரன் முழவுத்தோள் கையகத்தொழிந்த
திறள்வேறு கிடக்கை நோக்கி நற்போர்க்
கணையனாணியாங்கு மறையினன்
மெல்லவந்து நல்ல கூறி
மையீரோதி மடவோ யானுநின்
சேரியேனே யயலிலாட்டியே
னுங்கையாகுவெனினக் கெனத்தன்கைத்
தொடுமணிமெல் விரறண் ணெனத்தைவர
நுதலுங் கூந்தலு நீவிப்
பகல்வந்து பெயர்ந்த வாணுதற் கண்டே”
2

(அகம்-386)

இதனுள்,  யான்  நினக்குத்  தோழியாவேனெனப்  பரத்தை   நீவிய   பேணா  ஒழுக்கத்திற்குத்   தலைவி
நாணியது கண்டுதான் நாணினேனென்று தலைவற்குத் தோழி கூறியவாறு காண்க.

ஆடும்     மகளிர்  சூடிக்கழித்த  பல  பூக்களை மருவிப் பசுக்கள் தம் இடம் புகும்படியான மாலைக்
காலத்தில்  மரந்தையூர்  போலும் எம்மை நீ  விரும்பி  வந்தாயல்லை; அதனால் எம் நலனைத் தந்து
செல்லும்.

1. பொருள்: பக்கம் 148 - 149ல் காண்க.

2.பொருள் : பெரும! நாட்காலையில்   நீர்நாய்ப் போத்து    வாளையாகிய இரையைத் தேடும் ஊரனே!
பகலில் மறைவாக மெல்ல வந்து முகமனுரை கூறி, மடவோய்! யானும் ஊன்சேரியில் உள்ளேன்; அடுத்த
வீட்டுக்குரிமையுடையேன்; நினக்குத் தங்கையாவேன். என்று