பக்கம் எண் :

166தொல்காப்பியம் - உரைவளம்
 

இன்னுந் தலைவனது பேணா ஒழுக்கத்திற்குத் தலைவி நாணிய பொருளின் கண்ணுமெனவுங் கூறுக.
  

“யாயாகியளே மாஅயோளே
மடைமாண் செப்பிற் றமியவைகிய
பொய்யாப் பூவின் மெய்சாயினளே
பாசடைநிவந்த கணைக்கானெய்த
லினமீனிருங்கழியோத மல்குதொறுங்
கயமூழ்கு மகளிர் கண்ணின் மானுந்
தண்ணந் துறைவன் கொடுமை
நம்முணாணிக் கரப்பாடும்மே”

(குறுந்-9)
  

எனவரும். இவை இரண்டும் பொருள்.
  

சூள்நயத்     திறத்தாற் சோர்வு கண்டு அழியினும் - நயத்திறத்தாற் சூள் சோர்வு கண்டு   அழியினும்,
கூடுதல் வேட்கைக் கூறுபாட்டால் தான் சூளுறக் கருதிய சூளுறவினது பொய்ம்மையைக் கருதித்   தலைவி
வருந்தினும், தோழிக்குச் கூற்று நிகழும்.
  

உதாரணம்:
  

“பகல்கொள் விளக்கோடிரா நாளறியா
வென்வேற் சோழ ராமூரன்னவிவ
ணலம்பெறு சுடர் நுதறேம்ப
லெவன்பயஞ் செய்யுநீ தேற்றிய மொழியே”
2

(ஐங்-56)
   

இதனுள்,  இவள்  நுதல்  தேம்பும்படி  நீ  தேற்றிய  சொல்லெனவே சோர்வு கண்டு அழிந்தாளென்பது
உணர்ந்தும் இப்
  


கூறி,     தன்  கையின்  மோதிரமணிந்த விரலால் தண்ணெனப் பொருந்த நெற்றியையும் கூந்தலையும்
தடவிப்  பெயர்ந்த  நின்  பரத்தையைக்  கண்டு  பாணன்  என்பானது  கையகத்து ஆரியப் பொருநன்
அகப்பட்டு  அவனது முழவுத் தோள்கள் வலிமை வேறாகி உடல் மட்டும் கிடந்த நிலையைக் கணையன்
என்பான் கண்டு நாணியது போல நாணினேன்.

1.பொருள்: பக்கம் 149 - 150ல் காண்க.

2.பொருள்: பகல்போலும் விளக்கொளியால் இரவு என்பதையறியாத சோழரது  ஆமூர்போல்  வாளாகிய
இவளது  அழகு  பெறும் ஒளியுடைய நுதல் வாடும்படியாதலால் நீ தேற்றும் மொழிகள் இவட்கு என்ன
பயன் செய்யும்?