பக்கம் எண் :

கற்பியல் சூ.9167
 

பொய்ச்சூள் நினக்கு என்ன பயனைத் தருமெனத் தோழி தலைவனை நோக்கிக் கூறியவாறு காண்க.
  

“கோடுற  நிவந்த” (அகம்  266) என்னும்  மணிமிடை  பவளத்தைத்  தோழி கூற்றாகக் காட்டுவாரும்
உளர்.
  

பெரியோர்   ஒழுக்கம் பெரிது எனக் கிளந்து பெறுதகை இல்லாப் பிழைப்பினும், பெரியோர் பெறுதகை
இல்லாக்  கிளந்து  -  நன்  மக்கள்  பெறுந்தகைமை  இல்லறமாயிருக்குமென்றுஞ் சொல்லி,   பெரியோர்
ஒழுக்கம்  பெரிதெனக்  கிளந்து பிழைப்பினும் - நன்மக்கள் ஒழுகும் ஒழுக்கம்   பெரிதாயிருக்குமென்றுஞ்
சொல்லித்தான் தலைவனை வழிபாடு தப்பினும்; தோழிக்குக் கூற்று நிகழும்.
  

பெரியோரையுங் கிளந்தென்பதனையும் இரண்டிடத்துங் கூட்டுக.
  

உதாரணம்:
  

“வெள்ளி விழுத்தொடி மென்கருப்புலக்கை
வள்ளி நுண்ணிடைவயின் வயினுடங்க
மீன்சினையன்ன வெண்மணற் குவைஇக்
காஞ்சி நீழற்றமர்வளம்பாடி
யூர்க்குறு மகளிர் குறுவழிவிறந்த
வராஅலருந்திய சிறுசிரன் மருதின்
றாழ்சினை யுறங்குந் தண்டுறையூர
விழையாவுள்ளம் விழைவதாயினு
மென்றுங், கேட்டவை தோட்டியாக மீட்டாங்
கறனும் பொருளும் வழாமை நாடித்
தற்றகவுடைமை நோக்கி மற்றதன்
பின்னாகும்மே முன்னியது முடித்த
லனைய பெரியோரொழுக்கமதனா
லரிய பெரியோர்த்தேருங் காலை
நும்மோரன்னோர் மாட்டு மின்ன
பொய்யொடு மிடைந்தவை தோன்றின்
மெய்யாண்டுளதோவிவ்வுலகத்தானே”
1
  

(அகம் - 286)
  

இதனுள்,  ‘அறன்’  என்றது  இல்லறத்தை,  ‘தற்றகவுடைமை  நோக்கி’  என்றது தன்னால் அவ்வறனும்
பொருளுந் தகுதிப்
  


1. பொருள்: பக்கம் 151ல் காண்க.